ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது சரியா? கனிமொழி எம்.பி

  • IndiaGlitz, [Thursday,May 18 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய ரசிகர்களை சந்திக்கும் முதல் நாள் நிகழ்ச்சியில் பேசியபோது, 'என் வாழ்க்கை ஆண்டவன் கையில் தான் உள்ளது. இன்று என்னை நடிகனாக பயன்படுத்தி வருகிறார். நாளை அவர் என்னை அரசியல்வாதியாக மாற்றினால் அதை ஏற்றுக்கொள்வேன்' என்று அரசியலுக்கு வருவது குறித்து பேசினார்.
ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பலர் தங்களுடைய கருத்துக்களை கூறினர். சுப்பிரமணியம் சுவாமி தவிர கிட்டத்தட்ட எல்லோருமே அவர் அரசியலுக்கு வருவதை ஆதரித்தனர்.
இந்த நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் மகளும், ராஜ்யசபா எம்பியுமான கனிமொழி இன்று சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்தார். அப்போது ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தபோது, 'இது ஜனநாயக நாடு, யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்' என்று தெரிவித்தார்

More News

சச்சின் படத்தில் மதன் கார்க்கி பாடல்கள்

கிரிக்கெட் உலக சூப்பர் ஸ்டார் சச்சின் தெண்டுல்கரின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படமான 'சச்சின் ஏ பில்லியன் ட்ரீம்ஸ்' திரைப்படம் வரும் 26ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. கடந்த ஆண்டு வெளியான 'தோனி' படம் போலவே இந்த படமும் உலகம் முழுவதும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...

திகார் சிறையில் தினகரனை சந்தித்த அதிமுக பிரமுகர்கள்

இரட்டை இலை சின்னத்தை சட்டவிரோதமாக கைப்பற்ற தேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்பட்ட புகார் காரணமாக டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது ஜாமீன் மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது...

ரஜினியிடம் என்ன இருக்கிறது? முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஆவேசம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களை இன்று மூன்றாவது நாளாக சந்தித்து வருவது அனைவரும் அறிந்ததே. முதல் நாள் சந்திப்பின்போது ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து பரபரப்பான கருத்து ஒன்றை தெரிவித்தார்...

அடுத்தகட்ட ரசிகர்கள் சந்திப்பு எப்போது? ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை கடந்த 15ஆம் தேதியில் இருந்து சந்தித்து புகைப்படம் எடுத்து வருகிறார்...

ஜெயலலிதாவுக்கு கொடுத்த சத்தியத்தை காப்பாற்ற கடைசி மூச்சு வரை பாடுபடுவேன். பிரபல நடிகை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதிக்கு அதிமுக தலைவர்கள் யாராவது சென்று அஞ்சலி செலுத்தினால் அதிரடி திருப்பம் ஏற்படும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது...