ரஜினி, கமலுக்கு திமுக அழைப்பு! அழைப்பை மீண்டும் மறுப்பாரா கமல்?

மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு நாள் வரும் ஆகஸ்டு 7ஆம் தேதி அனுசரிக்கப்பட உள்ளது. இதனையடுத்து சென்னை கோடம்பாக்கம் முரசொலி அலுவலகத்தில் கருணாநிதியின் சிலை திறப்பு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலந்துகொண்டு சிலையை திறக்கவுள்ளார்.

இந்த நிலையில் இந்த விழாவில் பங்கேற்க பல்வேறு கட்சித் தலைவர்களுக்கும் பிரபலங்களுக்கும் திமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர்களுக்கும் திமுக அழைப்பு விடுத்துள்ளது

கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை திறப்பு விழா நடைபெற்றபோது கமலஹாசன் அந்த விழாவில் கலந்துகொள்ளவில்லை. ரஜினிகாந்த் மட்டுமே கலந்து கொண்டார். இந்த நிலையில் இந்த விழாவிலாவது கமல் கலந்து கொள்வாரா அல்லது விழாவை புறக்கணிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

லாஸ்லியாவை கட்டிப்போட்ட சேரன்: எதிர்ப்பு தெரிவிக்கும் கவின்

பிக்பாஸ் திரைக்கதை குழுவினர்களுக்கு கற்பனை வறண்டுவிட்டதா என்று தெரியவில்லை. ஒவ்வொரு வாரமும் மொக்கை டாஸ்க் ஒன்றை கொடுத்து போட்டியாளர்களையும் பார்வையாளர்களையும் இம்சைப்படுத்தி வருகின்றனர்.

மாணவர்களின் எதிர்கால எதிரி இதுதான்: நடிகர் விவேக்

நேற்று சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இருவர் ஒரு மாணவரை கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களால் பட்டப்பகலில் நடுரோட்டில் தாக்கிய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

போட்டி போட்டு ரிலீஸ் ஆகும் அஜித்-விஜய் படங்களின் புரமோஷன்கள்

அஜித் நடித்த நேர் கொண்ட பார்வை' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதியும் விஜய் நடித்த 'பிகில்' திரைப்படம் வரும் தீபாவளி தினத்திலும் வெளியாகவுள்ளது.

வைரமுத்துவை கைது செய்யுங்கள்: எச்.ராஜா கோரிக்கை

கடந்த சில மாதங்களுக்கு முன் ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கவிஞர் வைரமுத்து பேசியதாகவும், அதனையடுத்து அவரை கைது செய்ய வேண்டும் என்று கூறிய பாஜக பிரமுகர் எச்.ராஜா

மில்லியன் டாலர் பேபி சமந்தாவுக்கு சின்மயி வாழ்த்து

சமந்தா நடித்த 'ஓபேபி' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படம் தமிழகம் மற்றும் தெலுங்கு மாநிலங்களில் மட்டுமின்றி