உதயநிதியுடன் கமல்ஹாசன் சந்திப்பு… கூட்டணி பேச்சுவார்த்தையா???
- IndiaGlitz, [Wednesday,December 16 2020]
திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினும், மக்கள் நிதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனும் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆழ்வார் பேட்டையில் உள்ள ஓர் தனியார் இடத்தில் சந்தித்துப் பேசியதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் திமுக கூட்டணியில் இடம் பெறப்போகிறதா என்பது போன்ற சந்தேகத்தை ஊடகங்கள் கிளப்பி வருகின்றன.
திமுக தோழமை கட்சிகளுடன் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் தற்போது ஈடுபட்டு வருகிறது. இந்தச் சூழலில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இருவேறு இடங்களில் சந்தித்து பேசியதாகவும் அப்போது தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சு வார்த்தை நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவலின் உண்மை நிலரவம் குறித்த விரிவான அறிக்கை எதுவும் வெளியாகவில்லை.
மக்கள் நீதி மய்யத்திற்கு ஸ்டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்படாததை அடுத்து கமல்ஹாசன் கடும் அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்பட்டது. பின்னர் மதுரை, தேனி, தூத்துக்குடி போன்ற பகுதிகளில் அதிரடி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் இவர் தனது ஈகோவை விட்டுவிட்டு தலைவர் ரஜினிகாந்துடன் கூட்டணி சேர்ந்து மக்கள் பணியாற்ற தயாராக இருப்பதாகவும் செய்தி வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினை சந்தித்துப் பேசியதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்தச் சந்திப்புக் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார் திமுகவும் கமலும் தற்போது பலவீனமாகிவிட்டதால் ஒன்றாகச் சேர்ந்து அதிமுகவிடம் மோத நினைப்பதாகக் கருத்துத் தெரிவித்து உள்ளார்.