திமுக 7 பேரின் விடுதலையை நிராகரித்து விட்டு, அதிமுக மீது குற்றம் சொல்வதா??? தமிழக முதல்வர் காட்டம்…
Send us your feedback to audioarticles@vaarta.com
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சுமார் 30 ஆண்டுகளாகச் சிறையில் வாடும் நளினி, வி.ஸ்ரீகரன் என்ற முருகன், சாந்தன், ஏ.ஜி.பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், பி.ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதற்கான கோரிக்கைகள் தமிழகத்தில் தொடர்ந்து முன்னெடுக்கப் படுகிறது. இதுதொடர்பாக தமிழக அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்காக இந்த கோரிக்கை அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநரிடம் இருந்து எந்த இறுதியான முடிவும் வெளியாகவில்லை. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றம் 7 பேர் விடுதலை குறித்த மனுவிற்கு ஏன் ஆளுநர் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார் என்றொரு கேள்வியை எழுப்பி இருந்தது. இந்நிலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று காலை டெல்லி சென்று உள்ளார். முதலில் பிரதமரை சந்தித்த ஆளுநர் அடுத்ததாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் ஜனாதிபதி ஆகியோரையும் சந்தித்து பேசியிருக்கிறார்.
அந்தச் சத்திப்பின்போது தமிழகத்தில் உள்ள சில முக்கிய பிரச்சனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த பேச்சுவார்த்தையில் 7 பேரின் விடுதலை குறித்தும் இடம் பெற்றிருக்கலாம் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன. இப்படி இந்தியா முழுவதும் 7 பேரின் விடுதலை குறித்த விவகாரம் கடந்த சில வருடங்களாக கடும் இழுபறியில் இருந்து வருகிறது.
ஆனால் எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் 7 பேரின் விடுதலைக் குறித்து அதிமுக ஆளும் அரசு அக்கறை காட்டாமல் இருக்கிறது, ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்க வில்லை எனத் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். இந்தக் குற்றச்சாட்டிற்கு பதில் அளித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்,
“திமுக ஆட்சியில்தான் 7 பேரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அக்கறை இருந்திருந்தால் அன்றே அவர்கள் நடவடிக்கை எடுத்திருக்கலாம். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலைக்கு குரல் கொடுத்தது மாண்புமிகு அம்மா அவர்களும், தீர்மானம் நிறைவேற்றி மேதகு ஆளுநரிடம் அனுப்பியது அம்மாவின் அரசும்தான்” எனத் தனது டிவிட்டர் பக்கத்தில் காட்டமாகத் தெரிவித்து உள்ளார்.
திமுக ஆட்சியில் தான் 7 பேரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அக்கறை இருந்திருந்தால் அன்றே அவர்கள் நடவடிக்கை எடுத்திருக்கலாம்.
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) November 5, 2020
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலைக்கு குரல்கொடுத்தது மாண்புமிகு அம்மா அவர்களும், தீர்மானம் நிறைவேற்றி மேதகு ஆளுநரிடம் அனுப்பியது அம்மாவின் அரசும் தான்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments