திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி
Send us your feedback to audioarticles@vaarta.com
திமுக பொதுச்செயலாளரும் மறைந்த மு.கருணாநிதியின் நெருங்கிய நண்பருமான .பேராசிரியர் க.அன்பழகன் உடல்நலக்குறைவு காரணமாக, இன்று அதிகாலை சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று அவரிடம் நலம் விசாரித்தனர்.
திமுகவின் பொதுச்செயலாளராக பதவி வகித்து வந்தாலும் பேராசிரியர் க.அன்பழகன் அவர்களுக்கு 95 வயது ஆவதால் வயது மூப்பு காரணமாக கட்சியின் முக்கிய கூட்டங்களை தவிர மற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் ஓய்வு எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்பழகன், அப்பல்லோ, உடல்நலக்குறைவு, ஸ்டாலின், ஆ.ராசா
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout