வைகோவை கட்டியணைத்து இன்ப அதிர்ச்சி கொடுத்த துரைமுருகன்
Send us your feedback to audioarticles@vaarta.com
அரசியலில் கருத்துவேறுபாடு அதிகம் இருந்தாலும் பொது இடத்தில் சந்திக்கும்போது நாகரீகமாக நடந்து கொள்ளும் அரசியல்வாதிகள் பலர் உண்டு. அவ்வாறான சந்திப்பில் நெகிழ்ச்சியான சம்பவங்களும் நடப்பதுண்டு. அந்த வகையில் அப்படி ஒரு சம்பவம் சமீபத்தில் நடந்த கவிகோ அப்துல்ரஹ்மான் அவர்களின் இரங்கல் கூட்டத்தில் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் நல்லகண்ணு, வைகோ, கி.வீரமணி, திருமாவளவன், திருநாவுக்கரசர், கவிஞர் வைரமுத்து, பேரா.அருணன், காதர் மொய்தீன் உள்பட பலர் கலந்து கொண்டிருந்த நிலையில் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும்போது தாமதமாக வந்தார் திமுக பிரமுகர் துரைமுருகன். மேடையில் இருந்த ஒவ்வொருவரையும் கைகுலுக்கி வந்த துரைமுருகன், வைகோவிடம் வரும்போது அவரிடம் கைகுலுக்கியது மட்டுமின்றி கட்டியணைத்தது தனது பாசத்தை வெளிப்படுத்தினார். இதை சற்றும் எதிர்பாராத வைகோவும் நெகிழ்ச்சி அடைந்தார்.
வைகோ திமுகவில் பல ஆண்டுகள் இருந்தபோது அவரிடம் நெருக்கமாக இருந்த பல தலைவர்களில் துரைமுருகனும் ஒருவர். திமுகவை விட்டு வைகோ பிரிந்தபின்னரும் கூட அவரை நாகரீகமாக விமர்சித்தவர் துரைமுருகன் என்பது குறிப்பிடத்தக்கது. நல்ல நட்பு கட்சி வேறுபாடுகளை கடந்தது என்பதற்கு இந்த சம்பவம் ஒரு நல்ல உதாரணமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments