ரஜினி வாழ்த்தியதை விமர்சனம் செய்த திமுக பிரமுகர்!

ரஜினி வாழ்த்தினாலும் வாழ்த்தாவிட்டாலும் திமுகவுக்கு எந்த கவலையும் இல்லை என திமுக பிரமுகர் ஒருவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் திமுக பொதுச்செயலாளராக துரைமுருகன் அவர்களும் பொருளாளராக டிஆர் பாலு அவர்களும் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இதனை அடுத்து திமுக பிரமுகர்கள் மட்டுமின்றி அனைத்து கட்சி தலைவர்களும் துரைமுருகன் மற்றும் டிஆர் பாலுவுக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் ’தி.மு.க.வின் பொதுச்செயலாளராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மதிப்பிற்குரிய நண்பர் திரு துரைமுருகன் அவர்களுக்கும், பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மதிப்பிற்குரிய நண்பர் திரு டி.ஆர். பாலு அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் என்று கூறியிருந்தார். திமுக பொதுச் செயலாளர் மற்றும் திமுக பொருளாளர் ஆக பதவி ஏற்க இருக்கும் இருவருக்கும் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ரஜினிகாந்த் வாழ்த்து குறித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி கூறியபோது ’டி.ஆர்.பாலு, துரைமுருகன் ஆகிய இருவரும் ரஜினியின் நண்பர்கள் என்பதால் அவர் வாழ்த்து தெரிவித்திருக்கலாம். ஆனால் ரஜினி வாழ்த்தியதால் திமுகவுக்கு எந்த வரவும் வரப்போவதில்லை. அவர் வாழ்த்தினாலும் வாழ்த்தாவிட்டாலும் திமுகவுக்கு எந்தவித கவலையும் இல்லை’ என்றும் கூறினார். ரஜினியின் வாழ்த்தை திமுக பிரமுகர் ஒருவர் விமர்சனம் செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

மாமியாரிடம் சமரசம் பேச சென்ற கணவரை கொலை செய்த மனைவியின் கள்ளக்காதலன்! 

மாமியாரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற கணவரை அவரது மனைவியின் கள்ளக்காதலன் கொலை செய்ததாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

ஆசிரியர்கள் தின வாழ்த்துக்களை கூறிய திரையுலகின் இருமேதைகள்

தமிழ் திரை உலகின் இரு மேதைகள் என்று கூறப்படும் கமலஹாசன் மற்றும் வைரமுத்து ஆகிய இருவரும் இன்று ஆசிரியர் தின வாழ்த்துக்களை தங்களுடைய சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளனர் 

விஜய்யால் எம்ஜிஆர் இடத்தை நிரப்ப முடியுமா? அமைச்சர் ஜெயகுமார் பதில்

தளபதி விஜய் விரைவில் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாகவும் அதுகுறித்து அவரது தந்தையும் இயக்குனருமான எஸ்ஏ சந்திரசேகர் வழக்கறிஞர்களிடம் ஆலோசனை செய்து வருவதாகவும் ஒரு பக்கம் தகவல்

கொரோனா பரிசோதனையில் தொடர்ந்து முன்னிலை வகிக்கும் தமிழகம்!!! முதல்வரின் அதிரடி நடவடிக்கைகள்!!!

தமிழகத்தில் (ஆகஸ்ட் 6) ஒரேநாளில் 80 ஆயிரத்து 864 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது

திரையரங்குகள் திறப்பது எப்போது? மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 5 மாதங்களாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து பொதுமக்கள் ஸ்தம்பித்துப் போய் இருந்தனர்.