ரஜினி வாழ்த்தியதை விமர்சனம் செய்த திமுக பிரமுகர்!

ரஜினி வாழ்த்தினாலும் வாழ்த்தாவிட்டாலும் திமுகவுக்கு எந்த கவலையும் இல்லை என திமுக பிரமுகர் ஒருவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் திமுக பொதுச்செயலாளராக துரைமுருகன் அவர்களும் பொருளாளராக டிஆர் பாலு அவர்களும் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இதனை அடுத்து திமுக பிரமுகர்கள் மட்டுமின்றி அனைத்து கட்சி தலைவர்களும் துரைமுருகன் மற்றும் டிஆர் பாலுவுக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் ’தி.மு.க.வின் பொதுச்செயலாளராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மதிப்பிற்குரிய நண்பர் திரு துரைமுருகன் அவர்களுக்கும், பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மதிப்பிற்குரிய நண்பர் திரு டி.ஆர். பாலு அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் என்று கூறியிருந்தார். திமுக பொதுச் செயலாளர் மற்றும் திமுக பொருளாளர் ஆக பதவி ஏற்க இருக்கும் இருவருக்கும் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ரஜினிகாந்த் வாழ்த்து குறித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி கூறியபோது ’டி.ஆர்.பாலு, துரைமுருகன் ஆகிய இருவரும் ரஜினியின் நண்பர்கள் என்பதால் அவர் வாழ்த்து தெரிவித்திருக்கலாம். ஆனால் ரஜினி வாழ்த்தியதால் திமுகவுக்கு எந்த வரவும் வரப்போவதில்லை. அவர் வாழ்த்தினாலும் வாழ்த்தாவிட்டாலும் திமுகவுக்கு எந்தவித கவலையும் இல்லை’ என்றும் கூறினார். ரஜினியின் வாழ்த்தை திமுக பிரமுகர் ஒருவர் விமர்சனம் செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.