ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமைக் கோரினார் மு.க.ஸ்டாலின்!
- IndiaGlitz, [Wednesday,May 05 2021]
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 259 தொகுதிகளில் வெற்றிப்பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. இதையடுத்து வெற்றிப்பெற்ற எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்று சென்னை அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிப்பெற்ற 215 எம்எல்ஏக்கள் மற்றும் உதயச்சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட 8 எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.
அந்தக் கூட்டத்தில் திமுக சட்டமன்றக் கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலின் திமுக சட்டமன்றக் குழு தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையடுத்து தற்போது மு.க.ஸ்டாலின் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமைக் கோரியுள்ளார். மேலும் சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டதற்கான திமுக எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தையும் ஆளுநரிடம் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார்.
ராஜ்பவன் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் திமுகவின் மூத்த அரசியல் தலைவர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் உடன் இருந்ததாகவும் கூறப்படுகிறது.