உடல்நலம் குன்றிய நிலையிலும் பாட்ஷாவை பார்த்த கருணாநிதி

  • IndiaGlitz, [Saturday,December 17 2016]

திமுக தலைவர் கருணாநிதி சமீபத்தில் இரண்டாவது முறையாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சூப்பர் ஹிட் படமான 'பாட்ஷா' திரைப்படம் டிஜிட்டல் மற்றும் 5.1 ஒலி அமைப்புக்கு மாற்றப்பட்டு அதன் டிரைலர் நேற்று வெளியானது.

இந்த டிரைலரை நேற்று திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையிலும் லேப்டாப்பில் பார்த்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது.

திமுக தலைவர் கருணாநிதியும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் நீண்ட கால நண்பர்கள் என்பதும் சமீபத்தில் கருணாநிதியை நேரில் சந்தித்து ரஜினிகாந்த் உடல்நலம் குறித்து விசாரித்தார் என்பதும் அனைவரும் அறிந்ததே.

More News

சசிகலா கணவர் நடராஜனின் கொலை மிரட்டல். கராத்தே ஹூசனி

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைந்த பின்னர் அவர் வகித்து வந்த அதிமுக பொதுச்செயலாளர் பதவியை பிடிக்க சசிகலா முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.

சோலார் பேனல் வழக்கு. பெண் தொழிலதிபர் சரிதா நாயருக்கு 3 ஆண்டு ஜெயில்

முன்னாள் கேரள முதலமைச்சர் உம்மண்சாண்டி உள்பட பல விவிஐபிக்கள் சம்பந்தப்பட்டதாக கூறப்பட்ட சோலார் பேனல்...

சசிகுமார் படத்திற்கு கிடைத்த 'பலே' சான்றிதழ்

'கிடாரி' வெற்றி படத்திற்கு பின்னர் சசிகுமார் நடித்துள்ள 'பலே வெள்ளைத்தேவா' திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கும்...

ரூ.2 லட்சத்திற்கு மேல் டெபாசிட் செய்தவர்களுக்கு செக் வைத்த மத்திய அரசு

கடந்த மாதம் 8ஆம் தேதி பாரத பிரதமர் நரேந்திரமோடி ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று...

ரூ.100 கோடி முறைகேடு. பிரபல நடிகை கணவருடன் கைது

அபார்ட்மெண்ட் வீடுகள் கட்டி தருவதாக பொய்யான வாக்குறுதி அளித்து பொதுமக்களிடம் ரூ.100 கோடிக்கும் மேல்...