திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!
Send us your feedback to audioarticles@vaarta.com
திமுக தலைவர் கருணாநிதி வயது மூப்பின் காரணமாக கடந்த சில ஆண்டுகளாகவே தீவிர அரசியலில் இருந்து விலகி முழு ஓய்வு எடுத்து வருகிறார். அவரை முக்கிய தலைவர்கள் மட்டுமே சந்தித்து வருகின்றனர். சமீபத்தில் நடந்த கருணாநிதியின் 94வது பிறந்த நாள் விழா மற்றும் முரசொலி பவளவிழாவில் கலந்து கொள்ளும் அளவுக்கு அவரது உடல்நிலை இல்லாததால் அவர் கலந்து கொள்ளவில்லை.
இந்த நிலையில் இன்று காலை திடீரென அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. சென்னை மயிலாப்பூர் அருகே உள்ள காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
கருணாநிதி உடல்நிலை குறித்து சற்று முன் செய்திக்குறிப்பு வெளியிட்ட காவேரி மருத்த்வமனை, 'கருணாநிதி அவர்களுக்கு PEG என்ற டியூப் மாற்றப்படவுள்ளதாகவும், இந்த சிறிய சிகிச்சை முடிந்தவுடன் இன்றே அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் குறிப்பிட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com