மக்களவை தேர்தல்: திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் எவை எவை?
Send us your feedback to audioarticles@vaarta.com
வரும் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலைச்சிறுத்தைகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, உள்பட ஒருசில கட்சிகள் போட்டியிடவுள்ளன. இந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ள நிலையில் தற்போது எந்தெந்த கட்சிகள் எந்தெந்த தொகுதியில் போட்டியிடும் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திமுக: வடசென்னை, தென்சென்னை, மத்தியசென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், அரக்கோணம், வேலூர், தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், நீலகிரி, பொள்ளாச்சி, திண்டுக்கல், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், தூத்துகுடி, தென்காசி, திருநெல்வேலி.
காங்கிரஸ்: திருவள்ளூர், கிருஷ்ணகிரி, ஆரணி, கரூர், திருச்சி, சிவகங்கை, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி, மற்றும் புதுச்சேரி.
மதிமுக: ஈரோடு
விடுதலைச்சிறுத்தைகள்: சிதம்பரம், விழுப்புரம்
இந்திய யூனியன் முஸ்லீம் லீக்: ராமநாதபுரம்
மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட்: கோவை, மதுரை
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி: திருப்பூர், நாகை
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி: நாமக்கல்
இந்திய ஜனநாயக கட்சி: பெரம்பலூர்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout