ஜூன் 3,13, 23 நாட்கள்.... திமுக vs அதிமுக... தமிழக அரசியலில் நடக்கப்போகும் புதிய மாற்றங்கள் என்ன ...!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழக சட்டசபை தேர்தல் முடிவடைந்த நிலையில், திமுக மற்றும் அதிமுக கட்சிகளில் முக்கிய நிகழ்வுகள் நடக்கவுள்ளன.
ஜூன்-3 :
முக. அழகிரி, முக. ஸ்டாலின் இருவரும் வெகுநாட்களாக பேச்சு வார்த்தை இல்லாமல் இருந்து வந்தனர். நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில், திமுக அபார வெற்றி பெற்றதை தொடர்ந்து, அழகிரி தனது சகோதரர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்த வாழ்த்து செய்தி திமுக நாளிதழான முரசொலி மற்றும் இதர ஊடகங்களில் வெளியானது.
ஸ்டாலினின் முதல்வர் பதவியேற்பு விழாவிற்கு, அழகிரி மகன் துரைதயாநிதி மற்றும் மகள் கயல்விழி உள்ளிட்டோர் சென்றிருந்தனர். உதயநிதி, துரைதயாநிதியை ஆரத்தழுவி வரவேற்றது சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனால் அழகிரி திமுக-வில் கூடிய விரைவில் இணைவார் எனக் கூறப்பட்டது. மதுரைக்கு கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதல்வர் சென்றிருந்தார். தற்சமயம் சகோதரர்கள் சந்திப்பார்கள் எனக்கூறப்பட்டது. ஆனால் அழகிரி வீட்டிற்கு ஸ்டாலின் செல்லவில்லை. அண்மையில் துரைதயாநிதியின், இரண்டாவது மகனுக்கு பெயர் சூட்டுவிழா நடைபெற்றது. அப்போதாவது இருவரும் சந்தித்து கொள்வார்கள் என எதிர்பார்த்த நிலையில், இந்த சந்திப்பும் நிகழவில்லை.
இந்நிலையில் ஜூன்-3-ஆம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் பிறந்தநாள் வரவுள்ளது. அப்போது முக.அழகிரி மற்றும் முக.ஸ்டாலின் இருவரும் கலைஞரின் நினைவிடத்திற்கு ஒன்று சேர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிகழ்வு தமிழக அரசியலில் முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது.
ஜூன் 13 மற்றும் ஜூன் 23 :
அதிமுக அரசியலில் புதிய மாற்றம் ஒன்று ஏற்பட்டுள்ளது என்று சொல்லலாம். காரணம் சமீபத்தில் வெளியான சசிகலா அவர்களின் அடுத்தடுத்த 3 ஆடியோக்கள்தான். இவர் விரைவில் அதிமுக-வில் இணைவார் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் தினகரன் அவர்களின் மகளுக்கு ஜூன்13-இல் திருமணமும், ஜூன் 23-இல் வரவேற்பும் நடக்கவுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு யார்யார் விருந்தினராக அழைப்படுவார்கள், யார் செல்லப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்புகள் தற்போது நிலவி வருகிறது.
அதிமுக-வில் சசிகலாவை இணைக்க வேண்டும் என்ற நினைப்புள்ள ஓபிஎஸ் அவர்களுக்கு அழைப்பு போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஓபிஎஸ் தரப்பு ஆதரவு எம்எல்ஏ, எம்பி உள்ளிட்ட இருவருக்கும் அழைப்புவிடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தேர்தலுக்கு பின் சசிகலாவும், தினகரனும் சந்திக்கவில்லை.
இதனால் சசி- தினகரன் உறவு சுமுகமாக உள்ளதா..? சசிகலா அதிமுகவில் இணைவாரா..? தினகரன் மகள் திருமணத்தில் யார் யார் கலந்து கொள்ளப்போகிறார்கள்..? என்ற கேள்விகள் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. எனவே ஜூன் மாதத்தில் 3,13,23 உள்ளிட்ட தேதிகளில் தமிழக அரசியலில் புது மாற்றம், நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments