அதிக பேராசையால் அந்தரத்தில் தொங்கும் தேமுதிக
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆரம்பத்தில் இருந்தே அதிமுக கூட்டணியில் இணைய விஜயகாந்தின் தேமுதிக முடிவெடுத்துவிட்டாலும், அதிமுக கூட்டணியில் கூடுதல் தொகுதியை பெற திமுகவிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இதனை சற்று தாமதமாக புரிந்து கொண்ட திமுக, ஒரு கட்டத்தில் தேமுதிகவுடன் பேசுவதை நிறுத்திவிட்டு மற்ற கூட்டணி கட்சிகளுக்கு தொகுதியை பிரித்து கொடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தது.
திமுக கூட்டணியின் கதவு தேமுதிகவிற்கு அடைக்கப்பட்டதை புரிந்து கொண்ட அதிமுக, தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் மட்டுமே அதிலும் இரண்டு தனித்தொகுதிகள் என நிபந்தனை விதித்தது. இருப்பினும் தனித்து போட்டி என்ற பூச்சாண்டியை காண்பித்து வந்த தேமுதிக வேறு வழியில்லாமல் அதிமுக கூட்டணியில் இணைய சம்மதித்தது அதன்பின் தான் துணை முதல்வர் ஓபிஎஸ், விஜயகாந்தை நேரில் சந்தித்தார்.
ஆனால் நேற்று மீண்டும் ஒருபக்கம் அதிமுக-பாஜக தலைவர்களுடனும், இன்னொரு பக்கம் திமுக பொருளாளர் துரைமுருகனிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் தேமுதிகவின் இரட்டை வேடத்தை துரைமுருகன் பத்திரிகையாளர்கள் முன் வெட்ட வெளிச்சமாக்கியதால் தேமுதிகவின் முகமூடி கலைந்தது. தற்போது இருகூட்டணியில் இணைய முடியாமல் அந்தரத்தில் தேமுதிக தொங்கி வருகிறது. தேமுதிகவின் இந்த நிலைக்கு பிரேமலதா மற்றும் எல்.கே.சுதீஷ் ஆகியோர்களின் பேராசையே காரணம் என தேமுதிக தொண்டர்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout