3 வருடங்களுக்கு பின் மீண்டும் அமெரிக்கா சென்றார் விஜயகாந்த்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த 2018 ஆம் ஆண்டு சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற நிலையில் தற்போது மீண்டும் அமெரிக்கா சென்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
கடந்த 2005ஆம் ஆண்டு தேமுதிக என்ற கட்சியை தொடங்கிய விஜயகாந்த் அவர்கள் முதல் தேர்தலிலேயே நல்ல வாக்கு சதவீதம் வாங்கினார் என்பதும் அதற்கு அடுத்து அதிமுகவுடன் கூட்டணி வைத்து எதிர்க்கட்சித் தலைவரானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக தீவிர அரசியலில் ஈடுபடாமல் இருந்து வரும் விஜயகாந்த் உடல்நிலை சிகிச்சைக்காக அவ்வப்போது சிங்கப்பூர் மற்றும் அமெரிக்கா சென்று வந்தார்.
கடந்த 2018ஆம் ஆண்டு மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று திரும்பிய விஜயகாந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் அவ்வப்போது சிகிச்சை செய்து கொண்டார். இந்த நிலையில் தற்போது மீண்டும் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலை சென்னையில் இருந்து விஜயகாந்த் அமெரிக்கா சென்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
சென்னை விமான நிலையத்தில் விஜயகாந்த் சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறு முழு உடலையும் மறைக்கும் வகையில் கோட் மற்றும் தொப்பி, மாஸ்க் அணிந்து அமெரிக்கா சென்ற புகைப்படங்கள் வைரலாகி வருகிறது விஜயகாந்த். விஜயகாந்துடன் அவரது மனைவி பிரேமலதா மற்றும் மகன் சண்முக பாண்டியனும் அவர்கள் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் விஜயகாந்த் சில நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற்று அதன் பின் விரைவில் சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments