துபாய் மருத்துவமனையில் நர்ஸ்களுடன் படம் பார்த்த விஜயகாந்த்: வைரல் புகைப்படம்

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல் பரிசோதனை செய்வதற்காக துபாய் சென்றார் என்பதும் அவருடன் அவருடைய மகன் சண்முகபாண்டியன் சென்றார் என்பதையும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் துபாய் மருத்துவமனையில் கேப்டன் விஜயகாந்த் அந்த மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்களுடன் தமிழ் திரைப்படம் ஒன்றை பார்த்ததாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்

விஜயகாந்த் நடித்த சூப்பர் ஹிட் படங்களில் ஒன்று ’சத்ரியன்’ என்பது தெரிந்ததே. கடந்த 1990ஆம் ஆண்டு வெளியான இந்த படம் மிகப் பெரிய ஹிட்டான நிலையில், இந்தப் படத்தைதான் விஜயகாந்த் துபாய் மருத்துவமனையில் பார்த்தார் என்பதும், அவருடன் அந்த மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்களும் பார்த்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது குறித்த புகைப்படத்தை விஜயகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்

விஜயகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் இது குறித்து கூறியிருப்பதாவது: நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன். நான் நடித்த 'சத்ரியன்' திரைப்படத்தை, எனது சிகிச்சைக்கு உதவிபுரியும் செவிலியர் சகோதரிகளுடன் பார்த்த போது எடுத்த படம்’ என்று பதிவு செய்துள்ளார்.