தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார்.. மருத்துவமனை அறிவிப்பால் அதிர்ச்சி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்றிரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் அவர் காலமானார் என்று மருத்துவமனை வெளியிட்டுள்ள உள்ள அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேமுதிக தலைவர் மற்றும் நடிகர் விஜயகாந்த் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது உடல் பின்னடைவில் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறியிருந்த நிலையில் மருத்துவமனை வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர்
இந்த நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் சற்று முன்னர் காலமானார் என்று மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் விஜயகாந்த் மறைவு குறித்த தகவல் தெரிந்ததும் அவரது வீட்டிற்கும் தேமுதிக அலுவலகத்திற்கும் கட்சி நிர்வாகிகள் வருகை வருகை தந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் விஜயகாந்த் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments