விஜயகாந்த் சென்னை மருத்துவமனையில் அனுமதி: தீவிர சிகிச்சை
- IndiaGlitz, [Wednesday,May 19 2021]
தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு இன்று அதிகாலை திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து அவரது குடும்பத்தினர் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது விஜயகாந்த் அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாக கூறப்படுகிறது
மேலும் விஜயகாந்த் அவர்களின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் விரைவில் அறிக்கை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜயகாந்த் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவர் விரைவில் குணமாக வேண்டும் என அவரது கட்சி தொண்டர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்