டெல்லியில் மண்சோறு சாப்பிட்ட பிரேமலதா விஜயகாந்த்

  • IndiaGlitz, [Tuesday,April 11 2017]

தமிழக விவசாயிகள் கிட்டத்தட்ட ஒரு மாதகாலமாக டெல்லியில் வங்கிக்கடன் தள்ளுபடி உள்பட பல்வேறு கோரிக்கைகளுக்காக போராடி வருகின்றனர். பாதி மீசையை எடுப்பது, தரையில் உருண்டு அங்கபிரதட்சணம் செய்வது, ஒப்பாரி வைப்பது, அரைநிர்வாணம், முழு நிர்வாணம் போன்ற பலவிதங்களில் விவசாயிகள் போராட்டம் செய்த போதிலும் இன்னும் மத்திய அரசிடம் இருந்து விவசாயிகளுக்கு ஆதரவாக எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை
இந்த நிலையில் இன்று அடுத்தகட்டமாக தரையில் மண்சோறு சாப்பிடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் தேமுதிக தலைவரும் பிரபல நடிகருமான விஜயகாந்த் அவர்களின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்துள்ளார்.
அதுமட்டுமின்றி விவசாயிகளுடன் விவசாயியாக பிரேமதாவும் மண்சோறு சாப்பிட்டார். இதன்பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரேமலதா, 'விவசாயிகளின் நிர்வாணப் போராட்டம் தமிழகத்திற்கே தலைகுனிவு என்று கூறிய அவர், 'தேசிய நெடுஞ்சாலைகள் போல், இந்தியாவில் உள்ள அனைத்து நதிகளையும் இணைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். கடந்த பல ஆண்டுகளாக சரியான நிர்வாகம் இல்லாததால் தமிழகத்தில் கடும் வறட்சி ஏற்பட்டிருப்பதாகவும், தமிழகத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகளையும் தூர்வாரினால்தான் வறட்சியில் இருந்து விடுபட முடியும் என்றும் அவர் மேலும் கூறினார்.