கேப்டனை எப்படி பாத்துகிடனும்ன்னு எங்களுக்கு தெரியும்: பாண்டிராஜுக்கு பிரேமலதா பதில்..
Send us your feedback to audioarticles@vaarta.com
’கேப்டன் விஜயகாந்த்தை இப்படி எல்லாம் கஷ்டப்படுத்தாதீர்கள்’ என இயக்குனர் பாண்டிராஜ் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்த நிலையில் ’உங்கள் இலவச அறிவுரைக்கு நன்றி, அவரை எப்படி பார்த்துக்கணும் என்பது எங்களுக்கு தெரியும்’ என்றும் பிரேமலதா பதில் கூறியுள்ளார்.
சமீபத்தில் தேமுதிக செயற்குழு மற்றும் பொதுக்குழு நடந்தபோது அதில் விஜயகாந்த் கலந்து கொண்டார். அப்போது அவர் வீல் சேரில் உட்கார கூட முடியாத அளவில் சரிந்து விழுந்ததை பார்த்து தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலான நிலையில் இந்த வீடியோவை பார்த்த இயக்குனர் பாண்டிராஜ் தனது சமூக வலைதளத்தில் ’கேப்டன் திரு. விஜயகாந்த் அவர்களுக்கு , இப்பொழுது சரியான ஓய்வு தேவை .அவர் பூரண குணமடையும் வரை, அவரை இப்படியெல்லாம் கஷ்டப்படுத்தாதீர்கள். பிடித்த ஒரு ‘நல்ல மனிதரை இப்படி பார்க்க ரொம்பவே கஷ்டமா இருக்கு’ என தெரிவித்திருந்தார்.
இதற்கு பதில் அளித்துள்ள தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கூறியதாவது: ‘எதைப் பத்தி வேனா, என்ன வேனால பேசலாம்னு கிடையாது. கட்சிக்காரங்க எல்லாரும் கடும் கோபத்தில் இருக்காங்க. தட்டிவிட்டா பத்திக்கும். மிஸ்டர் பாண்டிராஜிடம் நான் கேட்டுக் கொள்கிறேன். ஏதோ ஒரு பதிவு போடணும் என்பதற்காக பதிவிடாதீர்கள். இது சினிமா கிடையாது, கட்சி. எங்களுக்குத் தெரியும் எப்படி அவரை பாத்துக்கணும் என்று. உங்க அறிவுரைக்கும், இலவச அட்வைஸூக்கும் நன்றி மிஸ்டர் பாண்டியராஜன்’ என்று கூறியுள்ளார்.
கேப்டன் திரு. விஜய்காந்த் அவர்களுக்கு ,
— Pandiraj (@pandiraj_dir) December 14, 2023
இப்பொழுது சரியான ஓய்வு தேவை . அவர் பூரண குணமடையும்வரை
அவரை இப்படியெல்லாம் கஷ்ட்டப்படுத்தாதீர்கள் please ...🙏
பிடித்த ஒரு ‘நல்ல மனிதரை ‘
இப்படி பார்க்க ரொம்பவே கஷ்ட்டமா இருக்கு 😭🙏 https://t.co/roZTHx7btB
Captain #Vijayakanth 🥹💔
— Kolly Corner (@kollycorner) December 14, 2023
Praying For His Speedy Recovery 🙏pic.twitter.com/nNq1KkEds6
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments