40 தொகுதிகளிலும் தனித்து போட்டியா? தேமுதிக அதிரடியால் திமுக-அதிமுக அதிர்ச்சி
Send us your feedback to audioarticles@vaarta.com
அதிமுக கூட்டணியில் இணைய தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் தொகுதி எண்ணிக்கையில் உடன்பாடு ஏற்படாததால் பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ளது. இந்த நிலையில் நேற்று காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் திருநாவுக்கரசர், விஜயகாந்தை நேரில் சந்தித்ததால் தேமுதிக, திமுக கூட்டணிக்கு செல்லுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது
இந்த நிலையில் அதிரடி திருப்பமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தேமுதிக போட்டியிட விரும்புவதாகவும், 40 தொகுதிகளில் போட்டியிட விரும்புவோர் தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு அளிக்கலாம் என்று தேமுதிக அறிவித்துள்ளது. தேமுதிக தனித்து போட்டியிட்டால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது என்றாலும் வாக்குகளை பிரிக்கும் வலிமை தேமுதிகவுக்கு உண்டு என்றும், இக்கட்சி பிரிக்கும் வாக்குகளால் அதிமுக, திமுகவுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்,
ஆனால் அதே நேரத்தில் உடல்நிலை காரணமாக விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்ல முடியாத நிலை உள்ளதால் இரண்டாம் கட்ட தலைவர்களின் பிரச்சாரத்தை நம்பி தனித்து போட்டியிடுவது தேமுதிகவுக்கு பின்னடவையே தரும் என்றும் கூறப்படுவதால் அதிமுக அணியை பயமுறுத்தவே இந்த தனித்து போட்டி அறிவிப்பு என்றும் கூறப்படுகிறது
இந்த நிலையில் விஜயகாந்தை இன்று ரஜினிகாந்த் சந்திக்கவிருப்பதால் இந்த சந்திப்புக்கு பின் தேமுதிக முடிவில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout