திமுக கூட்டணியில் தேமுதிக? 4 தொகுதிகள் தர சம்மதம் என தகவல்

  • IndiaGlitz, [Saturday,February 23 2019]

அதிமுக கூட்டணியில் பாமகவும், பாஜகவும், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும் கூட்டணியை இறுதி செய்துள்ள நிலையில் தேமுதிக எந்த கூட்டணியில் இணையப்போகிறது என்பது சஸ்பென்ஸ் ஆகவே உள்ளது. இரண்டு கூட்டணியிலும் அக்கட்சியின் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இரு கூட்டணியுடனான பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ளதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், விஜயகாந்தை நேரில் சந்தித்துள்ள நிலையில் திமுக கூட்டணியில் தேமுதிக இணைய அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் வரை தருவதற்கு திமுக சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் இதுகுறித்து முடிவெடுக்க தேமுதிக இரண்டு நாட்கள் கால அவகாசம் கேட்டிருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது

எனவே தேமுதிகவின் முடிவு தெரியும் வரை விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், முஸ்லீம் லீக், மமக உள்பட மற்ற அரசியல் கட்சிகளுடனான கூட்டணி பேச்சுவார்த்தையை திமுக ஒத்தி வைத்துள்ளதாகவும் அக்கட்சியின் வட்டாரங்கள் கூறுகின்றன.
 

More News

இனியும் பொறுக்க முடியாது: புதிய கட்சியை ஆரம்பிக்கும் தமிழ் இயக்குனர்

முன்னாள் முதல்வர்களான ஜெயலலிதா, கருணாநிதி மறைவிற்குபின் திரையுலகில் உள்ள பலர் புதிய கட்சிகளை ஆரம்பித்து வரும் நிலையில் தற்போது இயக்குனர் கவுதமன் புதிய கட்சி ஒன்றை

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட விஜய், சூர்யா பட நடிகை!

விஜய், சூர்யா இணைந்து நடித்த 'ப்ரெண்ட்ஸ்' படத்தில் விஜய்க்கு தங்கையாகவும், சூர்யாவுக்கு ஜோடியாகவும் நடித்தவர் நடிகை விஜயலட்சுமி.

தேசம் தான் முக்கியம்; பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டி குறித்து விராத் கோஹ்லி

கடந்த வாரம் காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பாகிஸ்தான் தீவிரவாத இயக்கம் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டதில் இருந்து

179 நாடுகள், 10 ஆயிரம் விண்ணப்பங்கள்: சாதனை செய்த இந்திய நடிகை

ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் சிறந்த ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு சிறப்பு பரிசுகள் வழங்கப்படுவதுண்டு.

பெங்களூர் விமான கண்காட்சியில் மீண்டும் விபத்து: 150 கார்கள் எரிந்து சேதம்

பெங்களூரில் நடைபெற்று வரும் விமான கண்காட்சி அனைவரையும் கவர்ந்த நிலையில் இந்த கண்காட்சியின் பயிற்சியின் போது இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதியதால்