திமுக கூட்டணியில் தேமுதிக? 4 தொகுதிகள் தர சம்மதம் என தகவல்
- IndiaGlitz, [Saturday,February 23 2019]
அதிமுக கூட்டணியில் பாமகவும், பாஜகவும், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும் கூட்டணியை இறுதி செய்துள்ள நிலையில் தேமுதிக எந்த கூட்டணியில் இணையப்போகிறது என்பது சஸ்பென்ஸ் ஆகவே உள்ளது. இரண்டு கூட்டணியிலும் அக்கட்சியின் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இரு கூட்டணியுடனான பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ளதாகவும் கூறப்படுகிறது
இந்த நிலையில் நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், விஜயகாந்தை நேரில் சந்தித்துள்ள நிலையில் திமுக கூட்டணியில் தேமுதிக இணைய அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் வரை தருவதற்கு திமுக சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் இதுகுறித்து முடிவெடுக்க தேமுதிக இரண்டு நாட்கள் கால அவகாசம் கேட்டிருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது
எனவே தேமுதிகவின் முடிவு தெரியும் வரை விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், முஸ்லீம் லீக், மமக உள்பட மற்ற அரசியல் கட்சிகளுடனான கூட்டணி பேச்சுவார்த்தையை திமுக ஒத்தி வைத்துள்ளதாகவும் அக்கட்சியின் வட்டாரங்கள் கூறுகின்றன.