தேமுதிகவின் 4 தொகுதி வேட்பாளர்கள் இவர்கள்தான்!

அதிமுக கூட்டணியில் பெரும் பரபரப்புக்கு பின்னர் இணைந்த தேமுதிக, 4 தொகுதிகளை மட்டும் வேண்டா வெறுப்புடனும் வேறு வழியின்றியும் பெற்றது. அதிலும் கேட்ட தொகுதிகள் கிடைக்காததால் அதிருப்தியில் இருந்த தேமுதிக, அந்த நான்கு தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை சற்றுமுன் அறிவித்துள்ளது

தேமுதிகவின் வேட்பாளர் பட்டியல் இதோ:

கள்ளக்குறிச்சி - எல்.கே.சுதீஷ்

வடசென்னை - அழகாபுரம் மோகன்ராஜ்

திருச்சி - டாக்டர் இளங்கோவன்

விருதுநகர் - ஆர்.அழகர்சாமி

தேமுதிகவின் இந்த பட்டியலில் விஜயகாந்த், பிரேமலதா ஆகிய இருவரின் பெயர் இல்லாதது அக்கட்சி தொண்டர்களுக்கு ஏமாற்றத்தை அளிப்பதாகவே கருதப்படுகிறது.