விஜயகாந்துடன் புகைப்படம் எடுக்க பணம் கட்டி டோக்கன் வாங்கும் தொண்டர்கள்

  • IndiaGlitz, [Tuesday,February 28 2017]

பிரபல நடிகரும், தேமுதிகவின் தலைவருமான விஜயகாந்த் தற்போது தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை சந்தித்து வருகின்றார். இந்நிலையில் அவருடன் புகைப்படம் எடுக்க தொண்டர்கள் வரிசையில் நின்று பணம் கட்டி டோக்கன் பெற்று வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இன்று விழுப்புரத்தில் நடந்த தொண்டர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் விஜயகாந்துடன் புகைப்படம் எடுக்க தொண்டர்கள் குடும்பத்துடன் குவிந்தனர். கூட்டம் அதிகமானதால் அவர்கள் வரிசையில் நிற்க வைக்கப்பட்டதோடு டோக்கனும் வழங்கப்பட்டது. இந்த டோக்கனுக்கு பணமும் வசூலிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் உளுந்தூர்ப்பேட்டை தொகுதியில் மக்கள் நலக்கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக போட்டியிட்ட விஜயகாந்த் டெபாசிட்டை பறிகொடுத்து படுதோல்வி அடைந்தார் என்பது அனைவரும் அறிந்ததே.