பூஜாவுக்கு பாட்டு போட்டே விருது வாங்கிவிட்ட டிஜே பிளாக்..!

  • IndiaGlitz, [Monday,May 08 2023]

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான பூஜாவுக்கு என்று ஸ்பெஷல் ஆக பாட்டு போட்டு டிஜே பிளாக் விஜய் டிவி விருதை பெற்றுவிட்டது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் முக்கியமானது சூப்பர் சிங்கர் என்பதும் தற்போது சூப்பர் சிங்கர் சீனியர் 9வது சீசன் நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே.

சூப்பர் சிங்கர் என்றாலே ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக அனைவரும் பார்த்துக் கொண்டிருந்த நிலையில் சீசன் 9 மட்டும் பூஜா மற்றும் டிஜே பிளாக் ஸ்பெஷல் ஆக மாறிவிட்டது. பூஜா எப்போது பாட வருவார், அவருக்கு எந்த பாடலை டிஜே பிளாக் போடுவார் என்பதே பல ரசிகர்களின் எதிர்பார்ப்பாக மாறிவிட்டது.

பூஜாவை கேமராவில் காண்பித்தால் ஒரு பாட்டு, சிரித்தால் ஒரு பாட்டு, பாடினால் ஒரு பாட்டு, பேசினால் ஒரு பாட்டு, தும்மினால் கூட ஒரு பாட்டு என டிஜே பிளாக் தூள் கிளப்பி வருகிறார். எந்த சீசனிலும் இல்லாத அளவு டிஜே பிளாக் இந்த சீசனில் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விஜய் டிவி விருது வழங்கும் விழாவின் ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகி வரும் நிலையில் அதில் டிஜே பிளாக்கிற்கு விருது கிடைத்துள்ள காட்சிகள் உள்ளன. பூஜாவுக்கு பாட்டு போட்டே டிஜே பிளாக் விருதை வாங்கி விட்டார் என ரசிகர்கள் கமெண்ட்ஸ் அளித்து வருகின்றனர்.