close
Choose your channels

ரஜினி ரசிகர்களுக்கு சரியான தீபாவளி விருந்து.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட லைகா..!

Friday, November 10, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு சரியான தீபாவளி விருந்தாக லைகாவின் அறிவிப்பு வெளியாகியுள்ளதை அடுத்த ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்

இந்த ஆண்டு கமல், ரஜினி, அஜித், விஜய், சூர்யா உட்பட மாஸ் நடிகர்களின் திரைப்படங்கள் தீபாவளிக்கு வெளியாகவில்லை. இந்த நிலையில் ரஜினி ரசிகர்களுக்கு சரியான தீபாவளி விருந்தாக அவர் நடித்து முடித்துள்ளார் ’லால் சலாம்’ படத்தின் டீசர் தீபாவளி என்று வெளியாகும் என்று இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா அறிவித்துள்ளது.

‘லால் சலாம்’ படத்தின் டீசர் நவம்பர் 12ஆம் தேதி காலை 10. 45 மணிக்கு வெளியாகும் என்றும் இந்த டீசர் 34 வினாடிகள் கொண்டது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொங்கல் தினத்தில் இந்த படம் ரிலீஸ் ஆகும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தெலுங்கு ஹிந்தி மலையாளம் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகி இருக்கும் இந்த படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி உள்ளார் என்பதும், ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடவுள்ள இந்த படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள நிலையில் இந்த படத்தில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment