தாறு மாறா பட்டாசு வெடிப்போரின் கவனத்திற்கு… சென்னை போலீஸ் கமிஷனரின் எச்சரிக்கை!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
தீபாவளி பண்டிகை அன்று 2 மணி நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடிப்பவர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனையோ அல்லது ரூ.1,000 அபராதமோ விதிக்கப்படும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் எச்சரித்துள்ளார். இந்த 2 மணிநேரக் கட்டுப்பாடு சென்னைக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகத்திற்கு பொருந்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
காற்று மாசுபாடு காரணமாக இந்தியாவில் தீபாவளி பட்டாசுகளை வெடிப்பதற்கு 2 மணி நேரம் மட்டுமே அனுமதி என்ற தீர்ப்பை கடந்த 2018 ஆம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு வழங்கி இருந்தது. அதையொட்டி தமிழக்ததில் ஆண்டு தோறும் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகளை வெடிப்பதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக பல மாநில அரசுகள் பட்டாசு வெடிப்பதற்கே தடை விதித்து இருக்கின்றன.
ஆனால் தமிழக அரசு மக்களின் விருப்பத்தைக் கருத்தில் கொண்டு 2 மணி நேரம் பட்டாசுகளை வெடிப்பதற்கு அனுமதி அளித்து இருக்கிறது. தமிழகத்தில் இந்த ஆண்டு காலை 6 -7 வரையிலும் இரவு 7-8 வரையிலும் பட்டாசுகளை வெடிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. இந்நேரக் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடிப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் ஏற்கனவே எச்சரித்துள்ளார்.
இந்நிலையில் அரசு நிர்ணயித்துள்ள 2 மணி நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடிப்பவர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனையோ அல்லது ரூ.1,000 அபராதமோ விதிக்கப்படும் என்று போலீசார் எச்சரித்து உள்ளனர். இந்த விதிமுறையை மீறுபவர்களை கண்காணிப்பதற்கு தீபாவளி அன்று போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என்று தெரிகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com