தீபாவளி அன்று தமிழகத்தில் பட்டாசு வெடிக்கும் நேரம்: உச்சநீதிமன்றம் உத்தரவு
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் பட்டாசு குறித்த வழக்கு ஒன்றில் உச்சநீதிமன்றம் தீபாவளி அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு பெரும்பாலான மக்களை அதிருப்திக்கு உள்ளாக்கியது.
இந்த நிலையில் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கும் நேரத்தை அதிகரிக்க வேண்டும் என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் 'பட்டாசு வெடிக்கும் நேரத்தை அதிகரிக்க முடியாது என்றும், பட்டாசு வெடிக்கும் இரண்டு மணி நேரத்தை தமிழக அரசே தீர்மானிக்கலாம் என்றும் உத்தரவு பிறப்பித்தது
இந்த நிலையில் தீபாவளி அன்று தமிழகத்தில் காலை 4 மணி முதல் 5 மணிவரையும், இரவில் 9 மணி முதல் 10 மணிவரையும் பட்டாசு வெடிக்கலாம் என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
மேலும் தீபாவளியன்று தமிழகத்தில் பட்டாசு வெடிக்கும் நேரம் குறித்து விதிகள் பின்பற்றப்படுகிறதா என்பதை ஆட்சியர் தொடங்கி வி.ஏ.ஓ வரை கண்காணிக்க வேண்டும் என்றும், விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout