சூப்பர் ஸ்டார் ரஜினி வீட்டில் தீபாவளி கொண்டாட்டம்: வைரலாகும் புகைப்படங்கள்!

  • IndiaGlitz, [Sunday,November 15 2020]

நேற்றைய தீபாவளி திருநாள் இந்தியா முழுவதும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது என்ற நிலையில் கோலிவுட் திரையுலக பிரமுகர்களும் தீபாவளி கொண்டாட்டம் குறித்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். அந்த புகைப்படங்கள் வைரல் ஆனது என்பதும் தெரிந்தது

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது போயஸ் தோட்ட இல்லத்தில் தனது குடும்பத்தினருடன் தீபாவளியைக் கொண்டாடினார். இந்த ஆண்டு தலை தீபாவளி கொண்டாடும் சௌந்தர்யா பெற்றோர்கள், கணவர் மற்றும் குழந்தையுடன் தீபாவளி திருநாளை ரஜினியின் வீட்டில் கொண்டாடினார்

ரஜினி குடும்பத்தினர் மத்தாப்பு கொளுத்தியவாறு போஸ் கொடுத்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சர வெடியை வெடிக்க வைக்கும் புகைப்படத்திற்கு ரஜினி ரசிகர்களின் கமெண்ட்டுக்கள் குவிந்து வருகிறது. நரகாசுரனை கிருஷ்ண பகவான் அவதாரம் எடுத்து அழித்த மாதிரி, அரசியல் நரகாசுரன்களை ரஜினிகாந்த் அழிக்க வேண்டும் போன்ற கமெண்ட்டுக்கள் பதிவானது இணையத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

முன்னதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை தீபாவளியன்று சந்திக்க வேண்டும் என்று ஆவலுடன் வந்த ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த் அவர்களுக்கு தீபாவளி வாழ்த்து கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ரஜினியின் இன்னொரு மகளான ஐஸ்வர்யா தனுஷூம் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் பட்டாசு வெடித்து தீபாவளியை மிகவும் சிறப்பாகக் கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது