குழந்தை பெற்று கொள்ள பயமாக இருக்கின்றது. பிரதமரிடம் பிரபல நடிகை கூறியது ஏன்?

  • IndiaGlitz, [Saturday,August 19 2017]

பிரபல தொலைக்காட்சி நடிகை திவ்யங்கா திரிபதி என்பவர் தனது டுவிட்டரில் பிரதமர் மோடியின் டுவிட்டர் அக்கவுண்டை டேக் செய்து, 'நாட்டில் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள், பாலியல் கொடுமைகள் அதிகரித்து வருவதால் எனக்கு பெண் குழந்தைகள் பெற்று கொள்ள பயமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இவரது கருத்து கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் இந்தியா முழுவதும் சுதந்திர தினம் வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் சண்டிகாரில் பள்ளியில் சுதந்திர தினத்தை கொண்டாடிவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்த ஒரு சிறுமி பாலியல் கொடுமைக்கு ஆளானார். இந்த சம்பவம் நாடு முழுவதையும் அதிர்க்குள்ளாக்கியுள்ள நிலையில் நடிகை திவ்யங்கா திரிபதி தனது டுவிட்டரில், 'சாலையில் உள்ள குப்பைகளை மட்டும் பிரதமர் சுத்தம் செய்தால் போதாது, பெண்களை பாலியல் வன்கொடுகமைகளுக்கு உள்ளாக்கும் ஆண்களையும் அவர் சுத்தம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும் மகள்கள் தினம் என்றால் என்ன? என்று கேள்வி எழுப்பிய அவர், மகள்களை பாதுகாக்க வேண்டும் என்றும் இதுபோன்ற சம்பவங்களால் பெண் குழந்தைகளை பெற்று கொள்ளவே பயமாக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

More News

பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறியது யார்?

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக டல்லடித்து கொண்டிருந்தாலும் சனி, ஞாயிறு மட்டும் உலக நாயகன் கமல்ஹாசன் வருகை காரணமாக களைகட்டும்.

எனக்கும் லவ் இருக்கு! உளறி கொட்டிய காயத்ரி

பிக்பாஸ் வீட்டில் ஒரு பிரச்சனை என்றால் அதற்கு காரணமாகவோ அல்லது பின்னணியிலோ காயத்ரி இருப்பார் என்பது இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து கொண்டிருப்பவர்களுக்கு தெரியும்.

95% திரையரங்குகளில் 'விவேகம்' ரிலீஸ்! புதிய சாதனை ஏற்படுத்துமா?

தல அஜித், காஜல் அகர்வா, அக்சராஹாசன், விவேக் ஓபராய், கருணாகரன் நடிப்பில் சிவா இயக்கிய 'விவேகம்' திரைப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே உள்ளது

மகேஷ்பாபுவின் 'ஸ்பைடர்' ஆடியோ விழாவில் ரஜினி?

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடித்த முதல் நேரடி தமிழ் திரைப்படமான 'ஸ்பைடர்' படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து இந்த வருட இறுதியில் வெளியாக தயாராகி வருகிறது

ரஜினியுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் திடீர் சந்திப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரசிகர்களை சந்தித்த போது விரைவில் அரசியலுக்கு வரவிருப்பதை மறைமுகமாக தெரிவித்தார்.