பிரதமருக்கு சத்யராஜ் மகள் வைத்த முக்கிய கோரிக்கை!

பிரபல நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் ஊட்டச்சத்து நிபுணர் என்பதும் அவர் சமீபத்தில் “மகிழ்மதி இயக்கம்‌' என்ற இயக்கத்தை ஆரம்பித்தார் என்பதும் தெரிந்ததே. மேலும் அவர் விரைவில் ஒரு அரசியல் கட்சியில் சேரவிருப்பதாகவும் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு ஒரு முக்கிய கோரிக்கையை திவ்யா சத்யராஜ் முன்வைத்துள்ளார். இதுகுறித்து வெளியான செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சத்யராஜ்‌ மகள்‌ திவ்யா ஒரு பிரபலமான ஊட்டச்சத்து நிபுணர்‌. இவர்‌ கொரோனா நேரத்தில்‌ தமிழ்‌ மக்களுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவை இலவசமாக வழங்க “மகிழ்மதி என்ற இயக்கத்தை ஆரம்பித்திருக்கிறார்‌.
சில வருடங்களுக்கு முன்‌ மருத்துவ துறையில்‌ நடக்கும்‌ முறைகேடுகள்‌ பற்றியும்‌ நீட்‌ தேர்வை எதிர்த்தும்‌ திவ்யா சத்யராஜ்‌ பிரதமர்‌ மோடிக்கு எழுதிய கடிதம்‌ சமூக வலைதளங்களில்‌ வைரல்‌ ஆனது. இப்பொழுது ரத யாத்திரையை அனுமதிக்கக்‌ கூடாது என்று கோரிக்கை வைத்துள்ளார்‌. 

கொரோனா நேரத்தில்‌ தமிழ்நாட்டில்‌ ரத யாத்திரை நடந்தால்‌ மக்களுக்கு கொரோனா பரவ வாய்ப்புகள்‌ இருக்கிறது. கொரோனா நேரத்தில்‌ ரத யாத்திரையை அனுமதிப்பது நியாயம்‌ கிடையாது. தமிழ்‌ மக்களின்‌ உடல்‌ நலத்தின்‌ மீதும்‌ உயிர்‌ மீதும்‌ அக்கறை கொண்டுள்ள ஒரு ஊட்டச்சத்து நிபுணராகவும்‌, தமிழ்‌ மகளாகவும்‌ ரத யாத்திரையை எதிர்க்கிறேன்‌. மதத்தை வளர்ப்பதில்‌ இருக்கும்‌ அக்கறை மக்களின்‌ உயிர்‌ மீதும்‌ உடல்‌ நலத்தின்‌ மீதும்‌ இல்லாதது வருத்தமாக இருக்கிறது”

இவ்வாறு திவ்யா சத்யராஜ் தெரிவித்துள்ளார்.

More News

தியேட்டர்களில் ஒளிபரப்பாகிறதா ஐபிஎல் போட்டிகள்: மத்திய அரசிடம் கோரிக்கை

2020 ஆம் ஆண்டில் ஐபிஎல் போட்டிகள் வரும் 19ஆம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் நடைபெற உள்ளது என்பதும்

சென்னை இளைஞர்களால் ஏமாற்றப்பட்டாரா ஹர்பஜன்சிங்? பரபரப்பை ஏற்படுத்திய ரூ.4 கோடி விவகாரம்!

சென்னையை சேர்ந்த இளைஞர்கள் இருவர் தன்னிடம் 4 கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்துவிட்டதாக ஹர்பஜன்சிங் பதிவு செய்திருந்த புகாரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சிக்கன் பிரியாணி, கேரம்போர்டு வசதி: குணமாகியும் வீடு செல்ல மறுக்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்!

தஞ்சையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் கொரனோ சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர்கள் குணம் ஆகியும் வீடு செல்ல மறுப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

அஜித் படத்தை தயாரிப்பது உண்மையா? ஏஜிஎஸ் விளக்கம்

கோலிவுட் திரையுலகில் திரைப்படங்கள் தயாராவதை விட அதிகமாக தயாராவது வதந்திகள் தான் என்பதும், குறிப்பாக ஒருசில யூடியூப் சேனல்களிலும்

விவசாயிகளுக்கு வழங்கும் நிதியுதவித் திட்ட முறைகேட்டில் சட்டரீதியான நடவடிக்கை- தமிழக முதல்வர் அதிரடி!!!

இந்தியா முழுவதும் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்கும் (PM-Kissan) திட்டத்தில் நடைபெற்ற முறைகேடு சம்பவத்தில் தொடர்புடையவர்கள்மீது சட்டரீதியாக