close
Choose your channels

திமுகவில் சேர போகிறாரா திவ்யா சத்யராஜ்? திடீரென செய்த அரசியல் பதிவு..!

Thursday, June 6, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் திடீரென அரசியல் பதிவு செய்துள்ளதை அடுத்து அவர் திமுகவில் சேர போகிறாரா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ் ஒரு ஊட்டச்சத்து நிபுணர் என்பதும் அவர் சமீபத்தில் மக்களவைத் தேர்தலுக்குப் பின் அரசியல் கட்சி ஒன்றில் இணைய இருப்பதாகவும் கூறினார். மேலும் ஒரு மதம் சார்ந்த கட்சி தன்னை அணுகியதாகவும் ஆனால் அந்த கட்சியில் தான் இணைய முடியாது என்று மறுத்து விட்டதாகவும் அவர் கூறியிருந்ததும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் முடிவடைந்து முடிவுகளும் வெளியாகி உள்ள நிலையில் தமிழகத்தை பொறுத்தவரை 40 தொகுதிகளும் திமுக கூட்டணிக்கு சென்றுள்ளது.

இந்த நிலையில் திவ்யா சத்யராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 40க்கு 40, இது திராவிட மண், எப்போதும் வெற்றி நமக்கே’ என்று பதிவு செய்துள்ளார். இதையடுத்து அவருடைய பதிவுக்கு பலர் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

திராவிடம் காசு கொடுத்து தான் ஜெயிக்க முடிந்தது என்றும் , பெரியார் கொள்கையை பின்பற்றுபவர் உங்கள் அப்பா என்றும், எங்கள் தாத்தா இன்னமும் திமுகவுக்காக போஸ்டர் ஒட்டிக்கிட்டு தான் இருக்கிறார் என்றும், 40 பேர் ஜெயித்தும் ஒரு பயனும் இல்லை பாராளுமன்றம் போய் சும்மா உட்கார்ந்து இருக்கணும் என்றும் இது திராவிட மண்ணல்ல தமிழர் மண்’ என்றும் கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது.

திவ்யா சத்யராஜின் இந்த பதிவில் இருந்து அவர் திமுகவில் சேர வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் அவர் எந்த கட்சியில் சேருவார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.