திவ்யா துரைசாமிக்கு படப்பிடிப்பு தளத்தில் வைத்தியம் பார்த்த 'கர்ணன்' பாட்டி..!

  • IndiaGlitz, [Sunday,August 25 2024]

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான ’வாழை’ திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்த திவ்யா துரைசாமிக்கு படப்பிடிப்பு தளத்தில் ’கர்ணன்’ படத்தில் நடித்த பாட்டி, வைத்தியம் செய்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான ’வாழை’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் திவ்யா துரைசாமி நடித்திருந்தார் என்பது தெரிந்தது. இவர் வாழைத்தார்களை தலையில் உண்மையாகவே தூக்கி வைத்து நடித்த நிலையில் அவரது கழுத்து சுளுக்கி கொண்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்த கிராமத்து பாட்டி, திவ்யா துரைசாமிக்கு கழுத்தை தேய்த்து விட்டு சுளுக்கு எடுத்தார். இதுகுறித்த வீடியோவை திவ்யா துரைசாமி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து ’இந்த பாட்டியை உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? ’கர்ணன்’ திரைப்படத்தில் ’ஒரு முத்தம் வேணா கொடுத்துட்டு போ’ என்று சொல்வாரே அந்த பாட்டி தான் என்று தெரிவித்தார்.

மேலும் இவருடைய உதவியால் தான் 50 முதல் 70 கிலோ வரை எடையை தூக்கி ’வாழை’ படத்தில் நடித்ததாகவும் திவ்யா துரைசாமி கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

More News

மீதமிருக்கும் 'தங்கலான்' படத்தில் மூன்றரை மணி நேர காட்சிகள்.. விரைவில் ரிலீஸ்?

பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்த 'தங்கலான்' திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 30 நிமிடங்கள் இருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

வெற்றி மாறனின் மூன்றாம் பாக திரைப்படம்.. இதுக்கு எத்தனை ஆண்டுகள் ஆகுமோ?

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடித்த 'விடுதலை' திரைப்படம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியான நிலையில் இந்த படம் வெளியான ஒரு சில மாதங்களில் 'விடுதலை 2'

மேகா ஆகாஷ் கணவர் பிரபல அரசியல்வாதியின் மகனா? 2 படங்களில் உதவி இயக்குனர் பணி..!

நடிகை மேகா ஆகாஷ் திருமண நிச்சயதார்த்தம் கடந்த சில நாட்களுக்கு முன் முடிந்ததாக அவரே தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்து இருந்த நிலையில் தற்போது அவருடைய வருங்கால

முதல்வரை அடுத்தடுத்து சந்தித்த கமல்ஹாசன் , ரஜினிகாந்த்..!

தமிழக முதல்வர் கலந்து கொண்ட நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் நேற்று ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசினார் என்ற நிலையில் இன்று தமிழக முதல்வரை கமல்ஹாசன் சந்தித்துள்ள புகைப்படம் இணையத்தில் ஆகி வருகிறது.

'தக்லைஃப்' படத்தின் சூப்பர் ஸ்டில்லை வெளியிட்ட சிம்பு.. அட்டகாசமான கெட்டப்..!

நடிகர் சிம்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'தக்லைஃப்' படத்தின் சூப்பர் ஸ்டில்லை வெளியிட்டுள்ள நிலையில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.