திவ்யா துரைசாமிக்கு படப்பிடிப்பு தளத்தில் வைத்தியம் பார்த்த 'கர்ணன்' பாட்டி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான ’வாழை’ திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்த திவ்யா துரைசாமிக்கு படப்பிடிப்பு தளத்தில் ’கர்ணன்’ படத்தில் நடித்த பாட்டி, வைத்தியம் செய்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான ’வாழை’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் திவ்யா துரைசாமி நடித்திருந்தார் என்பது தெரிந்தது. இவர் வாழைத்தார்களை தலையில் உண்மையாகவே தூக்கி வைத்து நடித்த நிலையில் அவரது கழுத்து சுளுக்கி கொண்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்த கிராமத்து பாட்டி, திவ்யா துரைசாமிக்கு கழுத்தை தேய்த்து விட்டு சுளுக்கு எடுத்தார். இதுகுறித்த வீடியோவை திவ்யா துரைசாமி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து ’இந்த பாட்டியை உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? ’கர்ணன்’ திரைப்படத்தில் ’ஒரு முத்தம் வேணா கொடுத்துட்டு போ’ என்று சொல்வாரே அந்த பாட்டி தான் என்று தெரிவித்தார்.
மேலும் இவருடைய உதவியால் தான் 50 முதல் 70 கிலோ வரை எடையை தூக்கி ’வாழை’ படத்தில் நடித்ததாகவும் திவ்யா துரைசாமி கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com