close
Choose your channels

திவ்யா துரைசாமியின் அடுத்த சம்பவம்.. ரம்யா பாண்டியன் ஸ்டைலில் போட்டோஷூட்..!

Tuesday, April 25, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை ரம்யா பாண்டியன் ஒரே ஒரு இடுப்பழகு போட்டோஷூட் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமான நிலையில் அதே பாணியில் நடிகை திவ்யா துரைசாமியின் போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

சூர்யா நடித்த ’எதற்கும் துணிந்தவன்’ உள்பட ஒரு சில படங்களில் நடித்தவர். நடிகை திவ்யா துரைசாமி. இவர் சமூக வலைதளங்களில் கடந்த சில மாதங்களாக பிரபலமாகி வருகிறார் என்பதும் குறிப்பாக அவர் பதிவு செய்யும் கிளாமர் புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி வருகிறது என்று குறிப்பிடத்தக்கது.

சில நாட்களுக்கு முன்னர் ரம்யா பாண்டியன் ஸ்டைலில் எடுத்த புகைப்படங்களை பதிவு செய்த நிலையில் தற்போது மீண்டும் ரம்யா பாண்டியன் ஸ்டைலில் இடுப்பழகு போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்து சம்பவம் செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் தங்கள் பாணியில் காமெடியான கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை திவ்யா துரைசாமி தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ’வாழை’ என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படம் வெளியானதும் அவர் தமிழ் திரை உலகில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.