மீனாட்சி அம்மன் சிலை கோவிலுக்கு வெளிய இருக்குனு நினச்சுட்டேன்: திவ்யபாரதி லேட்டஸ்ட் பதிவுக்கு குவியும் கமெண்ட்ஸ்..!
- IndiaGlitz, [Thursday,July 20 2023]
நடிகை திவ்ய பாரதி சமீபத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்ற புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த பதிவுக்கு ஏராளமான கமெண்ட்ஸ் பதிவாகி இருக்கிறது.
ஜிவி பிரகாஷ் நடித்த ’பேச்சிலர்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை திவ்யபாரதி. இந்த படம் வெற்றி பெற்றதை அடுத்து அவர் அடுத்த வாய்ப்புக்காக காத்திருக்கிறார் என்பதும் அதற்காக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் என்பதையும் பார்த்து வருகிறோம்
இந்த நிலையில் தனது தாயாருடன் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றுள்ள புகைப்படங்களை திவ்யபாரதி தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இதனை பார்த்து 'டக்குனு பாத்ததும் என்னடா மீனாட்சி அம்மன் சிலை கோவிலுக்கு வெளிய இருக்குனு நினச்சுட்டேன்’ என்று கமெண்ட் செய்துள்ளார்.
அதேபோல் ’ஒரு தேவதையே கோவிலுக்கு சென்றுள்ளது’ என்றும் ’சேலையில் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்’ என்றும் ’ மதுரைக்கு போகாதடி அந்த மல்லிப்பூ கண்ண வைக்கும்’ போன்ற கமெண்ட்கள் பதிவாகி வருகிறது.