பிரிவினை அரசியல் நடக்கிறது.. எனினும் நாம் ஒன்றுபட்டு நிற்போம்..! ஏ.ஆர்.ரஹ்மான்.
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரிவினை அரசியல் நடக்கிறது. எனினும் மக்கள் ஒற்றுமையால் காட்டப்படுகிறார்கள் என ஏ.ஆர். ரஹ்மான் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலாக கூறியுள்ளார்.
"Ekam Satt Unity Concert: The 50th Symphony" என்னும் கச்சேரியில் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அமேயா டப்ளி ஆகியோர் இசையமைக்கவும், பாடவும் இருக்கின்றனர்.
அரசியல் பிரிவினை அதிகமாக நடந்துவரும் இந்த காலகட்டத்தில், கலைஞர்கள் அதைக் குறித்து கருத்து தெரிவிப்பது எவ்வளவு முக்கியமானது என்னும் கேள்விக்கு பதிலளித்த ஏ.ஆர்.ரஹ்மான், “பிரிவினை அரசியல் நடந்துகொண்டிருக்கிறது. எனினும் மக்கள் ஒற்றுமையால் கட்டப்படுகிறார்கள். நாம் அனைவரும் நம்பிக்கையையும், அறிவையும் பகிர்வதில்தான் அமைதி கொள்கிறோம். பள்ளிக் குழந்தைகளை எடுத்துக்காட்டாக எடுத்துக்கொள்ளலாம். சொன்ன விஷயத்தை மறுபடியும் அவர்களிடத்தில் சொன்னால், ஏற்கனவே சொன்னதை நீங்கள் சொல்லவேண்டாம் என பதில் அளிப்பார்கள். உண்மையை அவரவர்களே அறிந்துகொள்ளவேண்டும். அதுதான் சிறந்த விஷயமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Sai Surya
Contact at support@indiaglitz.com