ஊரடங்கின்போது சைக்கிளில் ரெய்டு நடத்திய பெண் கலெக்டர்!

  • IndiaGlitz, [Monday,January 10 2022]

கொரோனா அதிகரிப்பைக் கட்டுப்படுத்த நேற்று தமிழகம் முழுவதும் முழுஊரடங்கு அமலில் இருந்தது. இந்த நேரத்தில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு மிதிவண்டியில் பயணம் செய்து கண்காணிப்புப் பணிகளை ஆய்வுசெய்துள்ளார்.

முன்னதாக காலநிலை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் வாரத்தில் ஒருநாள் பொதுபோக்குவரத்து அல்லது எரிபொருள் சாராத வாகனங்களில் பயணம் செய்யுமாறு தமிழகஅரசு கேட்டுக்கொண்டது. இதனால் பல மாவட்டக் கலெக்டர்கள் மதிவண்டியில் பயணம் செய்து அலுவலகம் வந்தனர். ஒருசிலர் பொது போக்குவரத்தையும் பயன்படுத்தி இருந்தனர்.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு நேற்று தனது மிதிவண்டியை எடுத்துக்கொண்டு பழைய பேருந்து நிலையம், வடக்கு ராஜவீதி, மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை போன்ற இடங்களில் காவல் துறையினரின் கண்காணிப்புப் பணிகளை ஆய்வு செய்தார். மேலும் இளைஞர்கள் ஒருசில இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருந்ததைக் கவனித்த ஆட்சியர், அவர்களுக்கு முகக்கவசம் கொடுத்து அணியுமாறு வலியுறுத்தியுள்ளார்.

மேலும் 5 கி.மீவரை சைக்கிளில் பயணம் செய்த மாவட்ட ஆட்சியர் அங்கிருந்த காவல் துறையினரைச் சந்தித்து அவர்களுடன் ஆலோனையும் நடத்தியுள்ளார். இதையடுத்து கலெக்டர் கவிதா ராமுவின் இந்தச் செயல் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்ததாகப் பலரும் அவருக்குப் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

More News

வாட்டர் டேங்கில் மலைபோல் கொட்டிக்கிடந்த பணம்… ஐ.டி ரெய்டில் சுவாரசியம்!

மத்தியப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் வீட்டில் சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள் அவரது நிலத்தடி

மேலும் ஒரு நடிகைக்கு கொரோனா பாதிப்பு: டுவிட்டரில் தகவல்!

கடந்த சில நாட்களாக தமிழ் திரையுலக பிரபலங்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்ற நிலையில் தற்போது மேலும் ஒரு நடிகைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

360 கிலோவை அசால்ட்டாக ஹேண்டில் செய்த ப்ரியா பவானிசங்கர்: வேற லெவல் வீடியோ!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ப்ரியா பவானி சங்கரின் வொர்க்கவுட் வீடியோ ஒன்று அவரது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல்

சிம்புவுடன் சேர்ந்து டாக்டர் பட்டம் வாங்குபவர்கள் யார் யார் தெரியுமா?

வேல்ஸ் பல்கலைக்கழகம் நடிகர் சிம்புவுக்கு டாக்டர் பட்டம் கொடுக்க இருப்பதாக சமீபத்தில் அறிவித்தது என்பதும் இந்த டாக்டர் பட்டத்துக்கான விழா நாளை அதாவது ஜனவரி 11 ஆம் தேதி நடைபெறும்

பொதுவெளியில் சாக விரும்பிய நபர்… மனதை உருக்கும் சம்பவம்!

கொலம்பியா நாட்டில் கருணைகொலை செய்துகொள்ள விரும்பிய நபர் ஒருவர்