27ஆம் தேதி முதல் புதிய படங்கள் ரிலீஸ் இல்லை: விநியோகிஸ்தர்களின் முடிவால் மாஸ்டருக்கு சிக்கலா?
- IndiaGlitz, [Wednesday,March 11 2020]
மார்ச் மாதம் 27ம் தேதி முதல் எந்த விநியோகஸ்தரும் படங்களை விநியோகிப்பதில்லை என்று நேற்று நடைபெற்ற விநியோகஸ்தர்கள் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதால் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீஸாகவிருக்கும் விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படத்திற்கு சிக்கலா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
நேற்று தமிழ் திரைப்பட விநியோஸ்தர்கள் சங்கத்தின் கூட்டத்திற்கு பின்னர் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் சங்கத்தில் இயற்றப்பட்ட புதிய தீர்மானங்கள் குறித்து அறிவிக்கப்பட்டது. அவை பின்வருமாறு:
1. விநியோகஸ்தர்கள் படங்களை விநியோகித்து அதன் மூலம் வரும் வருவாய்க்கு விதிக்கப்படும் 10% TDS வரியை முற்றிலுமாக ரத்து செய்யவேண்டும் என்றும், இதற்கு மத்திய அரசு ஒத்துழைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தும் விதமாக, வரும் மார்ச் மாதம் 27ம் தேதி முதல் எந்த விநியோகஸ்தரும் படங்களை விநியோகிப்பதில்லை என்று ஒரு மனதாக முடிவேடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு விநியோகஸ்தர்களுக்கு விதிக்கப்படும் TDS வரியை நீக்கும் வரை நடைமுறையில் இருக்கும்.
2. தற்போது திரையரங்க நுழைவுக் கட்டணங்களுக்கான GST (12%) வரியுடன் கூடுதலாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு LBT (8%) கேளிக்கை வரி செலுத்துவதால் இது திரையரங்குகளுக்கு வரும் பார்வையாளர்களுக்கும் கூடுதல் சுமையாக அமைகிறது. ஆகையால் மேற்படி வரியினை (8%) முற்றிலும் ரத்து செய்ய தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு தீர்மானன்க்களால் மார்ச் 27ஆம் தேதி முதல் புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆவதில் சிக்கல் எழுந்துள்ளதாக தெரிகிறது. எனவே ஏப்ரல் 9ஆம் தேதி ‘மாஸ்டர்’ ரிலீசுக்கு சிக்கலா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இருப்பினும் மாஸ்டர்’ ரிலீசுக்கு எந்தவித சிக்கலும் இருக்காது என்றும், திட்டமிட்டபடி ‘மாஸ்டர்’ ரிலீசாகும் என்றும் படக்குழுவினர்கள் தெரிவித்து வருகின்றனர்.