தளபதி விஜய்யின் 'பீஸ்ட்' தோல்விப்படமா? பிரபல விநியோகிஸ்தர் வெளியிட்ட அறிக்கை
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படம் ஒரு பக்கம் ரூபாய் 200 கோடி வசூல் செய்ததாக தகவல் வெளியானாலும் சமூக வலைத்தளங்களில் ஒரு சிலர் இந்தப் படம் மிகப் பெரிய தோல்வி படம் என்றும் தியேட்டர் உரிமையாளர்களுக்கு நஷ்டத்தை கொடுத்த படம் என்றும் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் பிரபல விநியோகஸ்தர் கே. ராஜமன்னார் என்பவர் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த இரண்டு நாட்களாக சில தொலைக்காட்சி விவாதங்கள், யூ ட்யூப் பேட்டிகள் மற்றும் சமூக வலைதளங்களில் பீஸ்ட் படத்தையும், நடிகர் விஜய் பற்றியது மட்டம் தட்டும் விதமாக சில திரையரங்க உரிமையாளர்கள் கருத்துகள் தெரிவித்து வருகின்றார்கள்.
கேஜிஎப் 2 என்பது சினிமாவில் அரிதாக வரும் ஒரு பிரம்மாண்ட படைப்பு மிகப்பெரிய வசூல் சாதனை செய்து வருகிறது என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் அதே சமயம் பீஸ்ட் திரைப்படமும் மிகப்பெரிய வசூல் செய்துள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது,
தமிழ்நாட்டில் எந்த தியேட்டருக்கு எம்.ஜி அடிப்படையில் படத்தை திரையிடவில்லை, யாருக்கும் நஷ்டம் ஏற்படவும் இல்லை, 2022ல் வெளியான தமிழ் படங்களில் அதிக வசூல் செய்த படம் பீஸ்ட் என்பதே நிதர்சனமான உண்மை, நடிகர் விஜய் படத்தை திரையிட்ட அனைத்து திரையரங்குகளுமே பெரிய லாபம் அடைந்துள்ளனர்.
கொரோனா காலத்தில் அனைத்து திரையரங்குகள் எதிர்காலம் என்னவென்றே தெரியாமல் பாதிக்கப்பட்டு இருந்து போது ஓடிடியில் படத்தை திரையிடாமல் அந்த கடுமையான கொரோனா சூழலிலும் மாஸ்டர் படம் திரையரங்கிற்கு கொண்டு வர காரணம் நடிகர் விஜய். அன்று அவரை திரையரங்குகளுக்கு வாழ்வு தந்த விஜய் என்று புகழ்ந்த திரையரங்க உரிமையாளர்கள் இன்று எதோ ஒரு உள்நோக்கத்தோடு வேண்டுமென்றே பீஸ்ட் படத்தை பற்றி எதிர்மறை கருத்துக்களை பரப்புவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அனைத்து படங்களையுமே மிக நேர்த்தியாகவும், மாபெரும் வெற்றி படமாக எந்த நடிகராலும் தரமுடியாது சில படங்களில் குறைகளை இருக்கத்தான் செய்யும் அதை ரசிகர்கள் விமர்சிக்கலாம் ஆனால் அந்த நடிகர் படம் மூலமும் லாபம் அடைந்த திரையரங்க உரிமையாளர்கள் இன்று அவர்களையே ஏளனம் செய்வது மிகவும் தவறான செயல்...நன்றி மறப்பது நன்றன்று"
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout