விநியோகிஸ்தர் சங்க தேர்தல்: ஞானவேல்ராஜா தோல்வி

  • IndiaGlitz, [Monday,December 25 2017]

சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் பதவியில் இருந்து விலகிய பிரபல தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட விநியோகிஸ்தர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார்.  இவரது நம்ம அணியில் துணைத்தலைவர் பதவிக்கு கே ராஜன், துணை செயலாளர் பதவிக்கு ஸ்ரீராம், செயலாளர் பதவிக்கு நேசமணி, பொருளாளர் பதவிக்கு 'மெட்டி ஒலி' சித்திக் ஆகியோர்களும் போட்டியிட்டனர்.

இந்த சங்கத்தின் தேர்தல் சமீபத்தில் நடைபெற்ற நிலையில் நேற்று இரவு வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஞானவேல்ராஜா தோல்வி அடைந்தார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அருள்பதி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட விநியோகிஸ்தர் சங்கத்தின் தலைவர் பதவியை மீண்டும் கைப்பற்றினார்.

ஞானவேல்ராஜா இந்த தேர்தலில் வெற்றி பெறுவார் என்று பரவலாக கூறப்பட்டு வந்த நிலையில் பைனான்சியர் அன்புச்செல்வனின் ஆதரவு காரணமாக மீண்டும் அருள்பதி வெற்றி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.