டிஸ்னி+ ஹாட்ஸ்டார்,  ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் 'லேபில்' சீரிஸ்: இரண்டாவது டிரெய்லர் ரிலீஸ்!

  • IndiaGlitz, [Friday,November 03 2023]

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், நடிகர்கள் ஜெய் மற்றும் தன்யா ஹோப் ஆகியோர் நடிப்பில், இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், மிகவும் எதிர்பார்க்கப்படும் லேபில் சீரிஸின் இரண்டாவது டிரெய்லரை வெளியிட்டுள்ளது.

புதுமையான காட்சிகளுடன் வெளியான இரண்டாவது டிரெய்லர் தொடரின் மீதான எதிர்பார்ப்புகளை மேலும் அதிகரித்துள்ளது.

'லேபில்' சீரிஸில் இருந்து வெளியான ட்ரெய்லர் 1 மற்றும் ட்ரெய்லர் 2 ஆகிய இரண்டுமே, இந்த சீரிஸ் வலுவான கதைக்களத்தில் ஒரு அழுத்தமான படைப்பை, சுவாரஸ்யமாக தரும் என்பதை உறுதி செய்துள்ளது. பரபரப்பான டிரெய்லர் பார்வையாளர்களிடம் இந்த சீரிஸை பார்க்கும் ஆர்வத்தை அதிகரித்துள்ளது.

'லேபில்' சீரிஸ் நவம்பர் 10 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் பிரத்தியேகமாக ஸ்ட்ரீம் செய்யப்பட உள்ளது. இந்த சீரிஸை இயக்கியதோடு, இதன் திரைக்கதையையும் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார். கூடுதல் திரைக்கதை மற்றும் வசனங்களை ஜெயச்சந்திர ஹாஷ்மி எழுதியுள்ளார்.

'லேபில்' சீரிஸை முத்தமிழ் படைப்பகம் தயாரித்துள்ளனர். இசையமைப்பாளர் சாம் CS இசையமைத்துள்ளார் மற்றும் ஒளிப்பதிவை தினேஷ் கிருஷ்ணன் செய்துள்ளார். B.ராஜா ஆறுமுகம் படத்தொகுப்பாளராகவும், வினோத் ராஜ்குமார் கலை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளனர்.

யுகபாரதி, மோகன் ராஜா, லோகன் மற்றும் இயக்குனர் அருண்ராஜா காமராஜ் உட்பட நான்கு பாடலாசிரியர்கள் இந்த சீரிஸுக்கு பாடல்களை எழுதியுள்ளனர். நடன அமைப்பை அசார் மேற்கொள்ள, சண்டைக் காட்சிகளை சக்தி சரவணன் அமைத்துள்ளார்.

இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் வெப் சீரிஸில் ஜெய் மற்றும் தன்யா ஹோப் தவிர, நடிகர்கள் மகேந்திரன், ஹரிசங்கர் நாராயணன், சரண் ராஜ், ஸ்ரீமன், இளவரசு மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்டோரும் இணைந்து நடித்துள்ளனர்.

More News

கமல்-ஷங்கர் கொடுக்க போகும் டபுள் ட்ரீட்.. அதுவும் ஒரே வருடத்தில்.. ரசிகர்கள் குஷி..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி உள்ள 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் இந்த படம் வெளியாக உள்ளது.

ரஜினிக்கு வில்லனாக இந்த பிரபல நடிகர்-இயக்குனரா?  லோகேஷின் வேற லெவல் பிளான்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் 'தலைவர் 171' என்ற படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த சில தகவல்கள் கசிந்து வருகிறது.

அடுத்த வார கேப்டன் இவரா? பிக் ஹவுஸ் போட்டியாளர்களை வச்சு செய்வாரே?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் புதிய கேப்டனை தேர்வு செய்ய டாஸ்க் வைக்கப்பட்டு அதில் வெற்றி பெறுபவர் அடுத்த வார கேப்டனாக தேர்வு செய்யப்படுவார் என்பது தெரிந்ததே.

சதீஷின் 'கான்ஜூரிங் கண்ணப்பன்'.. டப்பிங்கில் நடந்த குளறுபடி.. வைரல் வீடியோ..!

காமெடி நடிகர் சதீஷ் ஹீரோவாக நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று 'கான்ஜூரிங் கண்ணப்பன்'. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் முடிவடைந்த நிலையில் தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று

சிட்டியில என்னை தவிர வேற எந்த ரவுடியும் இருக்கக்கூடாது: விக்ரம் பிரபுவின் 'ரெய்டு' டிரைலர்..!

 விக்ரம் பிரபு நடித்த 'ரெய்டு' என்ற திரைப்படம் வரும் தீபாவளி விருந்தாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.