டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ்: மலையாள வெப் சீரிஸ் மாஸ்டர்ஃபீஸ் டீசர் வெளியீடு !!

  • IndiaGlitz, [Tuesday,August 29 2023]

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்கும் இரண்டாவது மலையாள வெப் சீரிஸ் மாஸ்டர்ஃபீஸ் டீசர் வெளியாகியுள்ளது.

குடும்பத்தோடு ஒரு மகிழ்ச்சியான பயணத்திற்கு தயாராகுங்கள். அனைவரும் பார்த்து ரசிக்க, முன்னணி ஸ்ட்ரீமிங் தளம், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அதன் இரண்டாவது மலையாள வெப் சீரிஸ் மாஸ்டர் பீஸ் டீசரை வெளியிட்டுள்ளது.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் மாஸ்டர் பீஸ்' சீரிஸில், முன்னணி நட்சத்திரங்களாக நித்யா மேனன் மற்றும் ஷரஃப் U தீன், ரெஞ்சி பணிக்கர், மாலா பார்வதி, அசோகன் மற்றும் சாந்தி கிருஷ்ணா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த சீரிஸ் மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், பெங்காலி மற்றும் மராத்தி உள்ளிட்ட மொழிகளில் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது.

மாஸ்டர் பீஸ் குடும்பத்தோடு ரசிக்கும் வகையில், நகைச்சுவை கலந்த உணர்வுப்பூர்வமான டிராமாவாக இருக்கும். சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து வயதினரையும் கவர்ந்திழுக்கும், ஃபேமிலி எண்டர்டெயினராக இருக்கும்.

இந்த சீரிஸை சென்ட்ரல் அட்வர்டைசிங் நிறுவனம் சார்பில், மேத்யூ ஜார்ஜ் தயாரித்துள்ளார். இயக்குநர் ஸ்ரீஜித் N இயக்கியுள்ளார். மாஸ்டர் பீஸ் சீரிஸ், பற்றி மற்ற தகவல்கள் மற்றும் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

More News

ஸ்ரீகாந்த் தேவாவுக்கு கிடைத்த தேசிய விருது: 'கருவறை' இயக்குனரை பாராட்டிய இளையராஜா

இவி.கணேஷ்பாபு கதை,திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி தயாரித்திருக்கும்  கருவறை குறும்படத்திற்காக  அதன் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவிற்கு  தேசிய விருது அறிவிக்கப்பட்டதை அடுத்து,

டீசர் வெளியீட்டு விழா.. மீடியா முன் நடிகையின் கன்னத்தில் முத்தமிட்ட இயக்குனர்.. வைரல் வீடியோ..!

ஒரு திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் அந்த படத்தில் நடித்த நடிகையை கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிட்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

மெக்காவில் கதறி அழுத நடிகை.. வீடியோ வைரலானதால் பரபரப்பு..!

பிரபல பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் மெக்காவுக்கு சமீபத்தில் புனித யாத்திரை சென்ற நிலையில் அங்கு அவர் மெக்கா மசூதி முன் நின்று கதறி அழும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள

நடிகர் சிம்பு மீது வேல்ஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

நடிகர் சிம்பு மீது வேல்ஸ் தயாரிப்பு நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த நிலையில் இந்த வழக்கில் முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கணவருடன் தனிக்குடித்தனம் செல்கிறாரா ரோகிணி? விஜயா அதிர்ச்சி.. 'சிறகடிக்க ஆசை' அப்டேட்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்றான 'சிறக்கடிக்க ஆசை' என்ற சீரியல் மிகக் குறுகிய நாட்களில் பார்வையாளர்கள் மத்தியில் பிரபலமாகி விட்டது. குறிப்பாக முத்து, மீனா ஆகிய இருவரது நடிப்புக்கு