டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ்: மலையாள வெப் சீரிஸ் "மாஸ்டர்ஃபீஸ்" டீசர் வெளியீடு !!
Send us your feedback to audioarticles@vaarta.com
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்கும் இரண்டாவது மலையாள வெப் சீரிஸ் "மாஸ்டர்ஃபீஸ்" டீசர் வெளியாகியுள்ளது.
குடும்பத்தோடு ஒரு மகிழ்ச்சியான பயணத்திற்கு தயாராகுங்கள். அனைவரும் பார்த்து ரசிக்க, முன்னணி ஸ்ட்ரீமிங் தளம், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அதன் இரண்டாவது மலையாள வெப் சீரிஸ் "மாஸ்டர் பீஸ்" டீசரை வெளியிட்டுள்ளது.
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் "மாஸ்டர் பீஸ்' சீரிஸில், முன்னணி நட்சத்திரங்களாக நித்யா மேனன் மற்றும் ஷரஃப் U தீன், ரெஞ்சி பணிக்கர், மாலா பார்வதி, அசோகன் மற்றும் சாந்தி கிருஷ்ணா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த சீரிஸ் மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், பெங்காலி மற்றும் மராத்தி உள்ளிட்ட மொழிகளில் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது.
"மாஸ்டர் பீஸ்" குடும்பத்தோடு ரசிக்கும் வகையில், நகைச்சுவை கலந்த உணர்வுப்பூர்வமான டிராமாவாக இருக்கும். சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து வயதினரையும் கவர்ந்திழுக்கும், ஃபேமிலி எண்டர்டெயினராக இருக்கும்.
இந்த சீரிஸை சென்ட்ரல் அட்வர்டைசிங் நிறுவனம் சார்பில், மேத்யூ ஜார்ஜ் தயாரித்துள்ளார். இயக்குநர் ஸ்ரீஜித் N இயக்கியுள்ளார். மாஸ்டர் பீஸ் சீரிஸ், பற்றி மற்ற தகவல்கள் மற்றும் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com