அஞ்சலி நடித்த ஃபால்.. டிஸ்னி ஹாட்ஸ்டாரின் அடுத்த ஸ்பெஷல் தொடர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் தொடரான, ‘ஃபால் ‘( Fall ) , டிசம்பர் 9 முதல் உலகமெங்கும் ஒளிபரப்பு செய்கிறது!!
ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பை கிளப்பியிருக்கும் “ஃபால்” இணைய தொடரின் அதிரடியான டிரெய்லர் இன்று வெளியானது. இந்த தமிழ் தொடர் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் மராத்தி மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடப்படுகிறது.
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மிகவும் எதிரப்பார்ப்புக்குள்ளாகியிருக்கும் ஃபால் ‘( Fall ) தொடரின் டிரெய்லரை இன்று வெளியிட்டது. அஞ்சலி முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இந்த “ஃபால்” தொடர் "வெர்டிஜ்" எனும் கனடிய வெப் சீரிஸின் அதிகாரப்பூர்வ தழுவலாகும். இத்தொடரினை பனிஜய் ஆசியா தயாரித்துள்ளார்.
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம் இந்த ‘ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்’ தொடர் டிசம்பர் 9 முதல் ஒளிபரப்பாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நடிகை அஞ்சலி, முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இத்தொடரில் எஸ்பிபி சரண், சோனியா அகர்வால், சந்தோஷ் பிரதாப், நமிதா கிருஷ்ணமூர்த்தி, தலைவாசல் விஜய் மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இத்தொடரில் நடித்துள்ளனர்.
ITV company நிறுவனமான Armoza Formats விநியோகம் செய்யப்படும் , ‘ஃபால்’ தொடர் மைக்கேல் ஆலன் எழுத்தில், Productions Pixcom Inc நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட "வெர்டிஜ்" எனும் கனடிய வெப் சீரிஸின் அதிகாரப்பூர்வ தழுவலாகும்.
ஒரு இளம் பெண்ணுக்கு தான் தற்கொலைக்கு முயன்ற 24 மணி நேர சம்பவங்கள் மட்டுமே ஞாபகத்தில் உள்ளது. உண்மையில் என்ன நடந்தது என்பதை தேட ஆரம்பிக்கிறாள், தன் நண்பர்கள் உறவினர்கள் பற்றிய உண்மைகள் ஒவ்வொன்றாக வெளிவர, எது உண்மை யாரை நம்புவது எனும் குழப்பம் உண்டாகிறது. மறந்து போன தன் நினைவுகளிலிருந்து உண்மையை கண்டுபிடிக்க முயல்கிறாள்.
‘ஃபால்’ (Fall) தொடரை இயக்கியதுடன் ஒளிப்பதிவும் செய்திருக்கிறார் இயக்குநர் சித்தார்த் ராமசாமி. இத்தொடருக்கு அஜேஷ் இசையமைக்க, படத்தொகுப்பை கிஷன் C செழியன் கவனிக்கிறார்.
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஒரு முன்னணி ஸ்ட்ரீமிங் ஓடிடி தளமாகும். இது இந்தியாவில் பொழுதுபோக்கு, திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளையாட்டு மற்றும் வெற்றிகரமாக ஸ்ட்ரீம் செய்யும் மற்ற அனைத்து நிகழ்ச்சிகளையும் வழங்கி, மக்கள் பார்க்கும் விதத்தில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளமானது சுமார் 8 மொழிகளில் 1,00,000 தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் மற்றும் விளையாட்டு தொடர்பான ஸ்லாட்டுகளை உலகம் முழுவதிலிருந்து வழங்கி வருகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com