டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்கும் ஸ்பெஷல்.. சுரேஷ் சங்கையா - யோகி பாபு இணையும் படம்..!

  • IndiaGlitz, [Saturday,February 24 2024]

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், தனது அடுத்த படைப்பாக இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில், நடிகர் யோகி பாபு நடிக்கும் புதிய திரைப்படத்தை, அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் திரைப்படமாக உருவாகவிருக்கும் இந்தப் படத்தில், நடிகர் யோகி பாபு நாயகனாக நடிக்கிறார், லவ்லின் சந்திரசேகர் கதாநாயகியாக நடிக்கிறார்.

முன்னதாக இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில் வெளியான “ஒரு கிடாவின் கருணை மனு” மற்றும் “சத்திய சோதனை” படங்கள் பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இந்த புதிய திரைப்படத்தின் அறிவிப்பு, ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

RB Talkies சார்பில் S.R. ரமேஷ் பாபு மற்றும் Box office studios சார்பில் ஜெகன் பாஸ்கரன் ஆகியோர் இணைந்து இப்படத்தினை தயாரிக்கின்றனர்.

இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் திரைப்படத்தில் நடிகர்கள் ஜார்ஜ் மரியன், ரேச்சல் ரெபெக்கா மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இன்னும் தலைப்பிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு, மதுரை மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் படமாக்கப்பட்டு வருகிறது.

படம் குறித்து நடிகர் யோகி பாபு கூறுகையில், ‘சுரேஷ் சங்கையாவின் ஒரு கிடாவின் கருணை மனு மற்றும் சத்திய சோதனை ஆகிய படங்களை நான் பார்த்திருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த படங்கள் . அவருடைய படத்தில் நடிக்க ஆவலுடன் காத்திருந்தேன், அந்த அதிர்ஷ்டகரமான வாய்ப்பு இப்போது கிடைத்துள்ளது. இது டிஸ்னி+ ஹாட் ஸ்டாருடன் நான் இணைந்து பணியாற்றும் இரண்டாவது படைப்பாகும். மேலும் வரும் காலங்களில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்கும் பல தரமான கதையம்சமுள்ள படைப்புகளில் நான் தொடர்ந்து நடிப்பேன். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு ஒரு புதுமையான அனுபவமாக இருக்கும் என்றார்.

படம் குறித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா கூறுகையில், ‘இந்த வாய்ப்பை வழங்கிய டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு நன்றி. இந்த படத்தின் திரைக்கதை அனைத்து பார்வையாளர்களையும் ஈர்க்கும் வகையில், அசத்தலான பொழுதுபோக்குடன், பரபரப்பான ரோலர் கோஸ்டர் அனுபவமாக இருக்கும். மேலும் இப்படத்தில் சமூகத்திற்கு தேவையான அவசியமான செய்தியும் இருக்கும் என்றார்.

படம் குறித்து நடிகை லவ்லின் சந்திரசேகர் கூறுகையில், இயக்குநர் சுரேஷ் சங்கையாவின் அற்புதமான திரைக்கதையில் நடிப்பது மகிழ்ச்சி. இப்படத்தில் நான் அழகான மற்றும் தைரியமான இளம் பெண்ணாக நடிக்கிறேன். ஒரு மிகச்சிறந்த திரைப்படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறேன். தயாரிப்பாளர்கள் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் நன்றி என்றார்.

இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் படத்திற்கு நிவாஸ் K பிரசன்னா இசையமைக்க, V. தியாகராஜன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். P.L. சுபேந்தர் கலை இயக்கம் செய்ய, படத்தொகுப்பை R.ராமர் கையாள்கிறார்.

More News

’குக் வித் கோமாளி சீசன் 5’.. வெங்கடேஷ் பட் கூறிய அதிர்ச்சி தகவல்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சி கடந்த நான்கு சீசன்களாக பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் விரைவில்

2024 குரு பெயர்ச்சி பலன்கள்: யாருக்கு யோகம்? யாருக்கு கஷ்டம்?

பொதுவான பலன்கள்: மங்களகரமான ஆண்டு: வளர்ச்சி, செழிப்பு, புதிய தொடக்கங்கள் சமூக நலத்திட்டங்கள்: அரசாங்கத்தால் அதிக கவனம் கல்வி: கல்வி வளர்ச்சிக்கு புதிய திட்டங்கள் வேளாண்மை: விவசாயிகளுக்கு நல்ல பலன்கள்.

மாசி மகம்: 7 ஜென்ம பாவங்களைப் போக்கும் புனித தினம்!

மாசி மகம் என்பது இந்து மதத்தின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாகும். 7 ஜென்ம பாவங்களைப் போக்கும் தினமாகக் கருதப்படும் இந்நாளில், புனித நீராடல், விரதம், வழிபாடு போன்றவை சிறப்பு வாய்ந்தவை.

பரிதாபங்கள் புகழ் கோபி, சுதாகரின் அடுத்த அதிரடி “கோடியில் இருவர்” வெப் சீரிஸ் !!

Do. Creative Labs  தயாரிப்பில், பரிதாபங்கள் புரடக்சன்ஸ் மற்றும்  Scaler நிறுவனம் இணைந்து வழங்க, பரிதாபங்கள் கோபி சுதாகர் முதன்மை பாத்திரங்களில் நடிப்பில், இயக்குநர் ஷாகித்

'உன்னை உயிரோடு கொண்டு போய் சேர்க்குறது என் பொறுப்பு: 'ஜோஷ்வா இமைபோல் காக்க' டிரைலர்..!

கௌதம் மேனன் இயக்கத்தில், பிக்பாஸ் வருண் நடிப்பில் உருவான 'ஜோஷ்வா இமை போல் காக்க' என்ற திரைப்படம் வரும் மார்ச் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் சற்றுமுன்