டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் மலையாள ஒரிஜினல் சீரிஸ்: 'பேரில்லூர் பிரீமியர் லீக்' ஸ்ட்ரீமிங் தேதி அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Sunday,December 10 2023]

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சமீபத்தில் அதன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மலையாள ஒரிஜினல் சீரிஸான ​​“பேரில்லூர் பிரீமியர் லீக்” சீரிஸின் டிரெய்லரை வெளியிட்டது. அரசியலை இதயம் வருடும் நகைச்சுவை கலந்து சொல்லும் அட்டகாசமான சீரிஸ் “பேரில்லூர் பிரீமியர் லீக்”. இந்த சீரிஸ் வரும் 2024 ஜனவரி 5 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீம் செய்யப்பட உள்ளது.

இரண்டு நிமிடங்கள் கொண்ட இந்த டிரெய்லர், ஒரு கிராமம் அதன் மனிதர்கள் அவர்களிடையேயான உறவுகள், அரசியல் வேடிக்கைகள், வெடித்து சிரிக்க வைக்கும் நகைச்சுவை என அதிரடியான விருந்தளிக்கிறது “பேரில்லூர் பிரீமியர் லீக்”. நிகிலா விமல் மற்றும் சன்னி வெய்னுடன், இந்தத் தொடரில் விஜயராகவன், அஜு வர்கீஸ், அசோகன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திர நடிகர்கள் இந்த சீரிஸில் நடித்துள்ளனர் மற்றும் திறமையான தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பு பேரில்லூர் பிரீமியர் லீக்கை உண்மையிலேயே ரசிக்க வைக்கிறது.

E4 என்டர்டெயின்மென்ட் பேனரில் முகேஷ் R மேத்தா மற்றும் CV சாரதி தயாரித்துள்ள ‘பேரில்லூர் பிரீமியர் லீக்’ சீரிஸை புகழ்பெற்ற இயக்குநர் பிரவீன் சந்திரன் இயக்கியுள்ளார், தீபு பிரதீப் இந்த சீரிஸை எழுதியுள்ளார். ஒளிப்பதிவு இயக்குநரான அனூப் வி ஷைலஜா, கிராமப்புற கேரளாவின் சாரத்தை அசத்தலான காட்சிகளுடன் படம்பிடித்துள்ளார், அதே நேரத்தில் பவன் ஸ்ரீ குமாரின் தலைசிறந்த எடிட்டிங் இக்கதையை திரையில் அழகாக உயிர்ப்பிக்கிறது. முஜீப் மஜீதின் இசை இந்த சீரிஸை மெருகேற்றுகிறது.

‘பேரில்லூர் பிரீமியர் லீக்’ ஏழு வெவ்வேறு மொழிகளில் (மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, இந்தி மற்றும் பெங்காலி) ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது, இதன் மூலம் இந்தியா முழுவதும் உள்ள பார்வையாளர்கள் தங்கள் சொந்த மொழியில் இந்த நகைச்சுவை சீரிஸை ரசிக்க முடியும்.

டிரைலர் லிங்க்:

More News

சீரியல் நடிகையை திருமணம் செய்து கொண்ட ரெடின் கிங்ஸ்லி.. வைரல் புகைப்படங்கள்..!

தமிழ் திரை உலகின் காமெடி நடிகர்களில் ஒருவரான ரெடின் கிங்ஸ்லி, சீரியல் நடிகையை திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.  

விஷ்ணு தான் எல்லாத்துக்கும் காரணம்.. கமல் முன் போட்டு உடைக்கும் பூர்ணிமா..!

 பிக் பாஸ் நிகழ்ச்சி இன்று 70 வது நாளாக நடைபெற இருக்கும் நிலையில் இன்றைய அடுத்த ப்ரோமோவில் உங்கள் வெற்றிக்கு தடையாக இருக்கும் போட்டியாளர் யார் என கமல்ஹாசன் கேட்க

இரட்டையராக பிறந்த சகோதரியை தேடும் கதை: 'மதிமாறன்' திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !!

ஜி.எஸ் சினிமா இன்டர்நேஷனல்  தயாரிப்பில் அறிமுக இயக்குனர் மந்த்ரா வீரபாண்டியன் இயக்கத்தில், இவானா, வெங்கட் செங்குட்டுவன் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க , மாறுபட்ட திரில்லர் டிராமாவாக

சொன்னது போலவே ஹாலிவுட்டில் இடம் பிடித்த அட்லி.. ஜவான் படத்திற்கு கிடைத்த பெருமை..!

பாலிவுட் கிங்கான் ஷாருக்கான், இயக்குநர் அட்லி கூட்டணியில் உருவான ஜவான் இந்திய திரையுலக வரலாற்றில் பல புதிய சாதனைகளை படைத்த நிலையில், தற்போது  ஹாலிவுட்டில் வழங்கப்படும்

விஷாலின் 'துப்பறிவாளன் 2' படப்பிடிப்பு எப்போது? புதிய தகவல்..!

விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் உருவான 'துப்பறிவாளன்' திரைப்படம் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்து அறிவிப்பு 2019 ஆம் ஆண்டு