டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் “மத்தகம்” பத்திரிக்கையாளர் சந்திப்பு.. நாளை ரிலீஸ்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
இயக்குநர் பிரசாத் முருகேசன் இயக்கத்தில், நடிகர்கள் அதர்வா, மணிகண்டன், நிகிலா விமல் மற்றும் டிடி நடிப்பில் உருவாகியுள்ள ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸ் “மத்தகம்” வரும் ஆகஸ்ட் 18 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது. ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது
இந்நிலையில் மத்தகம் சீரிஸின் நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்.
ஒளிப்பதிவாளர் எட்வின் சாகே பேசியதாவது, ‘இயக்குநருக்கு நன்றி. பிரசாத் இயக்கத்தில் பணிபுரியனும்றது என் ஆசை. ஒரு ஃபுல் நைட்ல நடக்கிற கதை. இதுக்காக அதர்வா, மணிகண்டன் குழு கொடுத்த ஆதரவிற்கு நன்றி. உங்கள் எல்லோருக்கும் இந்த சீரிஸ் பிடிக்கும் நன்றி.
கலை இயக்குநர் சுரேஷ் பேசியதாவது, ’இந்த சீரிஸின் செட் வேலைக்கு மிகுந்த மெனக்கெடல் உழைப்பைப் போட்டுள்ளோம். இரவு நேரக் காட்சி என்பதால் மிக அதிகப்படியான வேலை இருந்தது. இயக்குநரின் ஆர்வம் தான் எங்களுக்கு ஒரு உந்துதலாக இருந்தது. சீரிஸிற்க்கு தேவையான அனைத்தையும் உண்மையான அர்ப்பணிப்புடன் கொடுத்துள்ளோம். உங்களுக்குப் பிடிக்கும் என நம்புகிறேன் நன்றி.
எடிட்டர் பிரவின் பேசியதாவது, ’இந்த சீரிஸ் ஒரு நல்ல திரில்லர் கதை. சீரிஸின் திரைக்கதையை கேட்கும்போதே மிக ஆர்வமாக இருந்தது. நடித்த அனைவரும் மிகச்சிறந்த இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். இரவு நேரங்களில் அதிக காட்சிகள் இருப்பதால் ஒளிப்பதிவாளர் மிகவும் சிரமப்பட்டு வேலை செய்துள்ளார். தர்புகா சிவாவின் இசை சிறப்பாக அமைந்துள்ளது, இசை இந்தக் கதைக்கு பெரிதும் உதவியுள்ளது. கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் ஒரு புதிய அனுபவத்தை இந்த படைப்பு கொடுக்கும் என்று நம்புகிறேன் நன்றி.
நடிகர் மணிகண்டன் பேசியதாவது, ’என்னுடைய சிறு சிறு முயற்சிகளுக்கு ஆதரவு அளித்து வந்த பத்திரிக்கையாளர்களுக்கு எனது நன்றி. இந்த சீரிஸ் பொறுத்த வரை எனக்கு மிகவும் எதிர்பார்ப்புக்கு மீறிய கதாபாத்திரம். இந்த சீரிஸின் படப்பிடிப்பு இரவில் தான் அதிகம் நடைபெற்றது. இயக்குநரின் உழைப்புதான் அந்த நேரத்திலும் எங்களை ஊக்குவித்தது. இந்த சீரிஸில் பல பல சிறு கதாபாத்திரங்கள் உள்ளது. ஆனால் சிறு கதாபாத்திரம் என்றாலும் அதற்கென தனி மெனக்கெடலைக் கொடுத்துள்ளனர். ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநர் இடைவிடாத பணியைக் கொடுத்துள்ளனர். இந்த படைப்பைப் பார்த்த பிறகு எங்களின் உழைப்பை விட இயக்குநரின் உழைப்பிற்குக் கிடைத்த வெற்றி என்றுதான் எங்களுக்குத் தோன்றியது. கண்டிப்பாக உங்களுக்கும் இது மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுக்கும் நன்றி.
நடிகர் அதர்வா பேசியதாவது, ‘மத்தகம் இப்ப ரிலீஸாகுது, ஆனா இது 2018, 19 ல ஆரம்பிச்சது. கௌதம் மேனன் சார் தான் இயக்குனர் பிரசாத் முருகேசனை அறிமுகம் செய்து வைத்தார். இந்தக் கதை முதல்ல பைபிள் பேர்ல இருந்தது. பல மாற்றங்கள் வந்தது. எப்படி வரப்போகுதுன்னு தயக்கம் இருந்தது. இப்ப வரக்காரணம் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தான், அவங்களுக்கு ரொம்ப நன்றி. பிரசாத் சார் இந்தக் கதையை குயினுக்கு முன்னாடியே எழுதிட்டார். மத்தகம் கதை ரொம்ப சூப்பரா வந்திருக்கு. அவர் நினைச்சத கொண்டு வந்துருக்காரு. முழுக்க நைட்ல தான் ஷீட் பண்ணோம். லைட் ஆஃப் பண்ணி எடுத்தாங்க, நான் தெரிவனா தெரிய மாட்டேனானு சந்தேகமா இருந்தது. ஆனா நான் நடிச்சதில பெஸ்ட்டாக இருக்கும். இப்ப நான் எங்க போனாலும் மணிகண்டன் பத்தி கேட்குறாங்க. அவர் கூட 2 நாள் தான் ஷூட் அப்பவும் தனித்தனியா வச்சு எடுத்தாங்க. உண்மையில மணி ரொம்ப ஹானஸ்டான மனிதர் அவர் கூட வேலை பார்த்தது சந்தோசம். டிஸ்னி+ ஹாட்ஸ்டார்ல வருது பார்த்து ஆதரவு தாங்க.
இயக்குநர் பிரசாத் முருகேசன் பேசியதாவது, ’எந்த ஒரு படைப்பும் ஒரு ஆழமான நம்பிக்கையில் தான் இயங்கும், அது போல என்னை நம்பிய தயாரிப்பாளருக்கு நன்றி. எனக்கு ஓடீடீ தளத்தின் மீது மிகுந்த ஆர்வம் இருந்தது. நீண்ட நாள் ஆசையாகவும் இருந்தது. வெப் சீரிஸ் செய்ய வேண்டும் என்று நினைத்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உருவான படைப்புதான் இந்த மத்தகம், தயாரிப்பாளர் சுந்தர் சாருக்கு மிகவும் கடமைப் பட்டுள்ளேன். இந்த மத்தகம் இந்த பாகத்தோடு மட்டுமில்லாமல் தொடருவதற்கு பல வாய்ப்புண்டு அதற்கான கதைகளும் உள்ளது. தர்புகா சிவாவிற்கு நன்றி. கிடாரி படத்திலிருந்து என்னுடன் பணி செய்கிறார், அவரது இசை மேலும் என்னை ஊக்குவிக்கிறது. ஒளிப்பதிவாளர் மிகப்பெரிய உதவியாக இருந்தார், இரவில் ஒளி அமைப்பை உருவாக்கப் பல மெனக்கெடல் செய்தார். கௌதம் மேனன் சாருக்கு நான் மிகவும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். கிடாரி படம் பார்த்ததிலிருந்து என் மேல் அதிக நம்பிக்கை வைத்தார். இந்த சீரிஸ் உருவாக அவரும் ஒரு முக்கிய காரணம். இன்று ஓடிடி தளம் அனைவரின் வீட்டிலும் கொண்டு போய் சேர்க்கிறது. நடிகர் அதர்வாவிற்கு நன்றி, இந்தப் சீரிஸிற்காக என்னை முழு மனதோடு நம்பினார். அது போல நடிகர் மணிகண்டன் ஒரு மிகச்சிறந்த நடிகர், அவர் கண்டிப்பாக மிகப்பெரிய உயரத்தை அடைவார் என்று எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. இந்த படைப்பிற்காக அவர் கொடுத்த உழைப்பு மிகப்பெரியது. அவருடன் தினமும் பல கதைகள் பற்றி விவாதிப்பேன். நிகிலா விமல் என்னுடைய முதல் படத்தின் கதாநாயகி, ஒரு மாத குழந்தைக்கு அம்மாவாக இதிலும் அவர் சிறப்பாக அவரது நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். இந்த சீரிஸில் நடித்துள்ள அனைத்து நடிகர்களுக்கும் நன்றி. நீங்கள் இல்லை என்றால் இந்த படைப்பு உருவாகி இருக்காது, என்னுடைய குழுவினர் அனைவருக்கும் நன்றி. அனைத்திற்கும் மேல் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் குழுவிற்கு மிகவும் நன்றி, இந்தப் படைப்பை மக்களிடம் கொண்டு செல்ல அயராது உழைத்துள்ளனர். உங்கள் அனைவருக்கும் இந்தப்படைப்பு கண்டிப்பாகப் பிடிக்கும் என்று நம்புகிறேன் நன்றி.
குட் நைட் புகழ் மணிகண்டன் முதல் முறையாக வில்லனாக நடிக்கும் இந்த சீரிஸில் அதர்வா நேர்மைமிகுந்த போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
இந்த சீரிஸில் பிரபல இயக்குநர் கவுதம் மேனன், டிடி (திவ்யதர்ஷினி), தில்னாஸ் இராணி, இளவரசு, வடிவுக்கரசி, அருவி திருநாவுக்கரசு, மூணாறு ரமேஷ், சரத் ரவி, ரிஷி காந்த் மற்றும் முரளி அப்பாஸ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.
இந்த சீரிஸுக்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார், எட்வின் சாகே ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் ஆண்டனி எடிட்டிங் செய்துள்ளார். இந்த சீரிஸ் ஆகஸ்ட் 18 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com