பிக்பாஸ் சீசன் 6: வைல்ட்கார்ட் போட்டியாளரை உறுதி செய்த ஹாட்ஸ்டார்!

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்தாலும் ஒருசில போட்டியாளர்கள் சரியாக விளையாடவில்லை என்ற அதிருப்தி பார்வையாளர்கள் மத்தியில் உள்ளது .

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை மேலும் விறுவிறுப்பாக்க இந்த வாரம் இரண்டு போட்டியாளர்களை வெளியேற்ற போவதாகவும் அதற்கு பதிலாக ஒரு போட்டியாளர் பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் போட்டியாளராக என்ட்ரி ஆக போவதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் டிஸ்னி ஹாட்ஸ்டார் டுவிட்டர் பக்கத்தில் வைல்ட்கார்ட் போட்டியாளர் பிக்பாஸ் வீட்டிற்குள் எண்ட்ரி ஆக இருப்பது உறுதி செய்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் அந்த போட்டியாளர் யார் என்பதை தற்போது அறிவிக்கவில்லை என்றாலும் இன்னும் ஒரு சில மணி நேரங்களில் அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே வைல்ட்கார்ட் போட்டியாளர் ஒரு திரையுலக நட்சத்திரம் என்றும் அவர் ஒரு சில படங்களில் நடித்துள்ளார் என்று கூறப்பட்ட நிலையில் கண்டிப்பாக ஒரு பிரபலம் தான் பிக்பாஸ் வீட்டிற்கு உள்ளே வரப் போகிறார் என்பது உறுதியாகி தெரிகிறது. எனவே பிக்பாஸ் நிகழ்ச்சி இனி அடுத்து வரும் 40 நாட்களும் விறுவிறுப்பாக செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

More News

நட்டி நடிப்பில் உருவான 'குருமூர்த்தி': ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஃபிரண்ட்ஸ் டாக்கீஸ் சார்பில் சிவசலபதி சாய்சரவணன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'குருமூர்த்தி'. நட்டி நடராஜ் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில் நடிகர் ராம்கி முக்கிய கதாபாத்திரத்தில்

தமிழ் உள்பட 3 மொழிகளில் சொந்தக்குரலில் டப்பிங் பேசிய ஆக்சன் ஹீரோ!

 தமிழ் திரை உலகில் மாஸ் நடிகர்களில்  ஒருவர் தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தி என 3 மொழிகளில் சொந்தக்குரலில் டப்பிங் பேசி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 

கணவர் மற்றும் காதலருடன் ஒரே அறையில்.. பிரபல பெண் யூடியூபர் கைது.. 

பிரபல பெண் யூடியூபர் நம்ரா காதிர் என்பவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இரண்டு பாடல்கள் அடுத்தடுத்து லீக்.. அதிர்ச்சியில் 'துணிவு' படக்குழுவினர்!

அஜித் நடித்த 'துணிவு' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது

சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' ரிலீஸ் எப்போது? கசிந்த தகவல்!

சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'மாவீரன்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன